மோசமான சண்டை.. பிரிந்து விட முடிவு செய்த ஸ்ரீஜா சொன்ன வார்த்தை.. செந்திலின் பதில்..!

ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கி மிர்ச்சி செந்தில் என தனக்கான ஒரு அடையாளப் பெயரை ஏற்படுத்திக் கொண்டவர்தான் செந்தில்குமார்.

இவர் முதன் முதலில் ரேடியோ மிர்ச்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அதில் இவர் இரவு நேரத்தில் சொல்லும் கதைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இப்போதும் இருக்கிறார்கள்.

மிர்ச்சி செந்தில்:

இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததுதான்.

இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஸ்ரீஜா நடித்திருந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே முகஜாடையில் இருப்பதால் Made for Each Other போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி அவர்களை வர்ணித்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்த போது ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகி காதலிக்க ஆரம்பித்தார்கள் .

அதன் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.

10 வருடம் குழந்தை இல்லை:

பொதுவாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பல நாட்கள் தொடர்ச்சியாக சேர்ந்து நடிப்பதால் இவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறிவிடுகிறது .

ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் தான் அதன் காதல் திருமணம் கடைசிவரை நிலைத்து நிற்கிறது. சிலர் காதலிக்கும் போது நல்ல புரிதலோடு இருந்துவிட்டு பின்னர் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள்.

அவர்களுக்கு விதிவிலக்காக இருப்பவர்கள் தான் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி. பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தனர்.

பின்னர் 2023 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றிய தங்களது வாழ்க்கை குறித்தும் வாழ்க்கையில் நடந்த சில மோசமான கசப்பான அனுபவங்களை குறித்தும் செந்தில் ஸ்ரீஜா ஜோடி வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.

பயங்கர சண்டை… விவாகரத்து செய்ய முடிவு:

அதில் செந்தில் பேசியதாவது எங்களுக்கு திருமணம் ஆன ஆரம்பத்தில் புரிதல் என்பது இல்லை. காதலிக்கும் போது நட்பாக பழகி எந்த அளவுக்கு புரிந்து கொண்டு மிகச்சிறந்த ஜோடியாக இருந்தோமோ, அதே புரிதல் திருமணம் ஆன பிறகு இல்லை.

கொஞ்சம் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது. எங்களுடைய புரிதலில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. இது எங்களுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும்.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் ஆக இருந்தாலும் சரி, முதல் மூன்று வருடங்கள் நீங்கள் எப்படியாவது கடந்த விட வேண்டும்.

அந்த மூன்று வருடங்களை கடந்து விட்டால் அதன் பிறகு உங்களுக்குள் பிரிவு என்ற பிரச்சனையே வராது. மூன்று வருடத்திற்குள் உங்களுக்கிடையே நல்ல புரிதல் வந்துவிடும்.

அதேபோல் தான் எங்களுக்கு கிட்டத்தட்ட மூன்று… நான்கு வருடங்கள் கழித்து தான் எங்களுக்குள் இருந்த பல பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்தது என செந்தில் கூறினார் .

பின்னர் தொடர்ந்து பேசிய ஸ்ரீஜா நான் கேமராவுக்கு வேண்டுமானால் பொய் சொல்லலாம். ஆனால் உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டை வந்தது .

அந்த மேஜிக் தான் காரணம்:

மிகப்பெரிய சண்டை எல்லாம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிந்து விடலாம் என்று கூட முடிவு செய்து விட்டோம்.

பின்னர் சில நாட்கள் பேசாமல் இருந்து மீண்டும் அவருடன் போய் பேச வேண்டும் என்ற ஒரு எண்ணம் எனக்குள் வந்துவிடும் அதுதான் மேஜிக்.

எந்த ரத்த சம்பந்தமே இல்லாத இந்த உறவில் இப்படி ஒரு மேஜிக் இருந்து விட்டால். அந்த உறவு நம்மை விட்டுப் போகாது. அதுதான் காதல் என ஸ்ரீஜா பேசியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam