சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சீரியல்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் துவங்கிய காலகட்டத்தில் சன் டிவிதான் சீரியல் தொடர்களை வெளியிடுவதில் முன்னணியில் இருந்த நிறுவனமாக இருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு போட்டி நிறுவனங்கள் நிறைய வந்த பிறகு சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. தற்சமயம் ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் அதிகமாக போட்டி போட்டு வருகின்றனர்.
சீரியல் போட்டி:
இதனால் மாடலிங் துறையில் இருக்கிற பெண்கள் பலருக்குமே மிக எளிதாக சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகைகளுக்கு தொடர்ந்து நிறைய சீரியல்களில் வாய்ப்பு கிடைக்கின்றது.
2018 ஆம் ஆண்டு ஓவியா என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரை தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர் நடிகை கோமதி பிரியா. கலர்ஸ் தமிழில் வெளியான இந்த தொடர் அப்பொழுது பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
சின்னத்திரையில் அறிமுகம்:
ஏனெனில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அப்பொழுதுதான் துவங்கப்பட்டிருந்தது. 390 எபிசோடுகள் சென்ற பிறகும் கூட அந்த அதற்கு வரவேற்பு என்பது பெரிதாக கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து நிறைய சீரியல்களில் முயற்சி செய்து வந்தார் கோமதி பிரியா. வேலைக்காரன் என்கிற ஒரு சீரியலில் நடித்தார் அந்த சீரியல் தயாரிப்பிலேயே நின்றுவிட்டது.
அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் சிறகடிக்க ஆசை என்கிற சீரியல் தான் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருக்கிறது. தற்சமயம் பரவலாக இல்லத்தரசிகள் பார்த்து வரும் ஒரு சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது.
கோமதி ப்ரியா வளர்ச்சி:
இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக முத்து என்கிற கதாநாயகனுடன் அவருக்கு திருமணம் ஆகி அதன் மூலமாக அந்த குடும்பத்தில் நடக்கும் விஷயங்களே சீரியலின் கதையாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் சமீபத்தில் அவர் பேசும்பொழுது முதன்முதலில் நான் சீரியலில் நடித்த போது எங்கள் வீட்டில் அந்த விஷயத்தை நான் கூறவே இல்லை. அந்த சீரியலின் ப்ரோமோ வெளிவந்த போது அதனை பார்த்த எனது வீட்டார் அந்த சீரியலில் இருக்கும் நடிகை உன்னை போலவே இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
அப்பொழுதுதான் அந்த சீரியலில் நான்தான் நடித்துள்ளேன் என்ற உண்மையை கூறினேன். அதைக் கேட்டு எனது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று பேட்டியில் கூறி இருக்கிறார் கோமதி பிரியா.