53 வயதில் கர்ப்பம் தரித்த நடிகை ரேகா..! எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 1980கள் முதலே பிரபலமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை ரேகா. 1986 இல் வந்த கடலோரக் கவிதைகள் என்னும் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரேகா.

அந்த முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்குப் பிறகு எவ்வளவோ திரைப்படங்களில் ரேகா நடித்த பிறகும் இப்போது வரை கடலோர கவிதைகள் அவருக்கு ஒரு அடையாளமான திரைப்படமாக இருந்து வருகிறது.

நடிகை ரேகா:

1986 இல் அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அதில் காதல் மன்னன் திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படத்தில்தான் கமல்ஹாசன் ரேகா உதட்டில் முத்தம் கொடுத்ததால் அதிக சர்ச்சையானது. அந்த வகையில் இரண்டாவது படத்திலேயே ரேகா சர்ச்சைக்குள்ளானார்.

அதற்கு பிறகு 1987இல் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரேகா. இப்படியே தொடர்ந்து அவரது மார்க்கெட் அதிகரித்து வந்தது. 1992க்கு பிறகு அவரது மார்க்கெட் குறைய தொடங்கியது.

சினிமாவில் வளர்ச்சி:

அதற்கு பிறகு குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். அதிலும் அவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் கிடைத்து வந்தன. அதே சமயத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் ரேகா நடித்து வந்தார்.

பிறகு 1996 முதல் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார் ரேகா. டிவி சீரியலிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஓடிவந்த பாரதி கண்ணம்மா சீரியல் வரை பல சீரியல்களில் ரேகாவின் முக்கியமான பங்கு இருந்து வருகிறது.

சீரியலில் பங்கு:

அதேபோல மலையாளத்திலும் அதிகமான சீரியல்களில் ரேகா நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக ரேகா இருந்துள்ளார்.

சமீபத்தில் ரேகா தன்னுடைய 53வது வயதில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் அதிகமாக பரவி வந்தது. இது ஒரு சர்ச்சைக்குரிய செய்தியாகவும் மாறி இருந்தது. அதன் விவரம் என்னவென்று பார்க்கும் பொழுது நடிகை ரேகா இயக்குனர் மாலதி நாராயணன் இயக்கும் மரியம் மா என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த திரைப்படத்தில் வயதான பிறகும் அவர் கர்ப்பம் ஆவது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போன வருடம் வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பு பெறவில்லை தற்சமயம் திடீரென அந்த படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதனால் தான் ரேகாவின் அந்த கர்ப்பிணி புகைப்படமும் ட்ரண்டாகி வருவதாக கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam