நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனகா. முதல் படத்திலேயே ஒரு நடிகை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்றால் அது நடிகை கனகாதான்.

அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது. நடிகை கனகா சினிமா பின்புறத்தைக் கொண்ட ஒரு நடிகை என்று கூறலாம். நடிகை தேவிகாவிற்கும் இயக்குனர் தேவதாசுக்கும் பிறந்தவர்தான் நடிகை கனகா.

பிறக்கும்போதே இரட்டை:

பிறக்கும் பொழுது நடிகை கனகா இரட்டைக் குழந்தைகளாகதான் பிறந்தார். ஆனால் அவருடன் பிறந்த இன்னொரு குழந்தை பிறக்கும் பொழுது இறந்து விட்டது என கூறப்படுகிறது. கனகாவின் இயற்பெயர் லட்சுமி பிரியா என்று கூறப்படுகிறது.

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவர் நடிக்கும் பொழுது இயக்குனர் கங்கை அமரன் அவரது பெயரை கனகா என்று மாற்றி அமைத்தார். கனகாவிற்கு மூன்று வயது இருக்கும் பொழுது அவரது பெற்றோர்கள் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து விட்டனர்.

படிப்பில் ஆர்வம் குறைவு:

அதன் பிறகு ஆறாம் வகுப்பு வரைதான் பள்ளியில் படித்தார். அதோடு படிப்பை நிறுத்திவிட்டு அப்பொழுது இருந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் கனகா.

அதனால்தான் மிகச்சிறு வயதிலேயே அவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கனகா நடிக்க ஒப்பந்தம் ஆகும் பொழுது அவருக்கு வயது 16 தான் ஆகியிருந்தது.

வயதால் வந்த பிரச்சனை:

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கனகா நடிக்கும் போது 16 வயதான ஒரு மைனர் பெண் கதாநாயகியாக நடிக்க கூடாது என்று கூறி அவர் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கனகாவின் தந்தையான தேவதாஸ்.

இந்த நிலையில் சிறுமிகள் படத்தில் நடிக்க கூடாது என்றெல்லாம் சட்டத்தில் சொல்லவில்லை என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து இருக்கின்றனர். ஆனால் தாமதமாக கனகா கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நேரடியாக பத்தாம் வகுப்பு படிக்க அவர் ஆசைப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து இவர் அதிசய பிறவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பத்தாம் வகுப்பை தொலைதூரக் கல்வியில் படித்துக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

தமிழில் நிறைய வெற்றி படங்களில் நடித்ததை அடுத்து மலையாளத்தில் இவர் நடித்த காட்பாதர் என்னும் திரைப்படம் 400 நாட்கள் வரை ஓடி கேரளாவில் பெரும் சாதனையை படைத்தது. தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் நானூறு நாட்கள் ஓடிய படத்தில் நடித்த ஒரே நடிகை கனகாதான். இப்படி பல சாதனைகளை செய்த கனகா ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் வரவேற்பை பெற்று வந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam