இந்த நடிகர் விந்துவை கொடுத்து உதவி செய்யணும்.. தொகுப்பாளினி பாவனாவின் பதிவுக்கு  நடிகர் கொடுத்த பதில்..!

விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலங்கள் மட்டும் வளர்ந்து வருவதில்லை. நிறைய தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு விஜய் டிவி உதவியிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் கூட ஒரு தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமாகிதான் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருக்கிறார்.

அதே வகையில்  தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனும் விஜய் டிவியில் வளர்ந்து வந்த ஒரு தொகுப்பாளினி எனக் கூறலாம். ஆரம்பத்தில் ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாக இருந்து வந்த பாவனா அதன்பிறகு முதன்முதலாக ராஜ் டிவியில்தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

வி.ஜே பாவனாவின் வளர்ச்சி:

பீச் கேர்ள்ஸ் என்னும் நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளனியாக அறிமுகமான பாவனா அதன் பிறகு விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனியாக வந்தார். அதனை தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியில்தான் அவர் பணிபுரிந்து வருகிறார்.

இதற்கு நடுவே 2017 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐ.பி.எல் கிரிக்கெட் மற்றும் ப்ரோ கபடி லீக் ஆகிய விளையாட்டுகளுக்கு கமெண்ட்ரி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து அதற்கு சம்பந்தப்பட்ட நடிகர் விடை அளித்து இருக்கிறார்.

சர்ச்சை பதில்:

பாலிவுட்டில் பிரபலமான வாரிசு நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். கிரிஸ், தூம் மாதிரியான திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களும் அவரை அறிவர். பெரும்பாலும் ரித்திக் ரோஷன் நடிக்கும் திரைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெறக்கூடியவை.

இந்த நிலையில் அவர் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வார் என்கிற ஒரு படம் வெளியானது. பெரும் பட்ஜெட்டில் வெளியான அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்பொழுது அந்த திரைப்படத்தை பார்த்த நடிகை பாவனா அந்த படத்தை பார்த்து மிகவும் வியந்து போனதாக கூறினார்.

மேலும் அது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ஹிருத்திக் ரோஷன் அவசியம் அவரது விந்து அணுவை தானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் அர்த்தம் என்னவென்று ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்தது.

பதில் கொடுத்த பிரபலம்:

இதனை தொடர்ந்து அதிகமாக அவரை கேலி செய்து வந்தனர் ரசிகர்கள் இந்த நிலையில் அதற்குப் பிறகு  அந்த விஷயம் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. அது ஓய்ந்து விட்டது என்று கூறலாம்.

இதற்கு நடுவில் ஹிருத்திக் ரோஷனிடம் ஒரு பேட்டியில் பேசும்பொழுது அங்கு இருந்த தொகுப்பாளர் மீண்டும் இந்த விஷயத்தை கிளறி இருக்கிறார். ”ஒரு தொகுப்பாளர் இந்த மாதிரி விந்து அணுவை தானம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டிருக்கிறாரே” என்று ஹிருத்திக் ரோஷனிடம் கேள்வி கேட்ட பொழுது வேறு ஏதாவது உருப்படியான ஒரு கேள்வியை கேளுங்களேன் என்று சிரித்தபடியே பதில் கொடுத்து இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam