இந்த தமிழ் நடிகருடன் டேட்டிங் போகணும்ன்னு ஆசை.. ஓப்பனாக கூறிய மாளவிகா ஷர்மா..!

அழகிய இளம் நடிகையாக வளர்ந்து வரும் புதிய முகங்களுக்கு தமிழ் சினிமாவும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது .

குறிப்பாக மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த மாளவிகா சர்மா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார்.

மாடல் அழகியாக மாளவிகா ஷர்மா:

நல்ல அழகான தோற்றத்துடன் வசீகர லுக்குடன் அவர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாடல் அழகியாக பார்க்கப்பட்டார்.

இதை எடுத்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தெலுங்கில் சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமானார் .

அவர் ரவி தேஜா உடன் நெலா டிக்கெட் என்ற படத்தின் மூலமாக 2018 ஆம் ஆண்டிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார் .

அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததோடு கோலிவுட்டில் பிரபலமான நடிகையாகவும் பார்க்கப்பட்டார்.

தெலுங்கு சினிமாவில் பிரபலம்:

டோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாகும் தென்பட்டு வந்தார். அடுத்த படம் ரெட் திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் மாளவிகா மோகன்.

எனக்கு தெலுங்கு தவிர மற்ற மொழி திரைப்படங்களிலும் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அப்படித்தான் அவர் தமிழில் காபி வித் காதல் என்ற ஒரு திரைப்படத்தில் தியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் இருந்து வருகிறார்.

வசீகர அழகுக்கு குவியும் ரசிகர்கள் கூட்டம்:

வசீகரிக்கும் அழகான தோற்றத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ரசிகர்களையும் தன் அழகால் சொக்கி இழுத்தவர் தான் மாளவிகா ஷர்மா.

இவர் முதல் படத்திலிருந்து பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுவிட்டார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி. இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை மாளவிகா சர்மா சட்டப் படிப்பு பயின்ற வழக்கறிஞராக மாடலிங் துறையில் தனக்கு இருந்த ஆசையால் நுழைந்து தற்போது திரைப்பட நடிகையாக மாறிவிட்டார்.

இதனிடையே பல்வேறு விளம்பர திரைப்படங்களில் மாடல் அழகியாக நடித்து பெரும் புகழ்பெற்று வந்தார் 2017 ஆம் ஆண்டு ப்ளூ இந்தியா பிராண்ட் தூதராக. நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அதன் மூலம்தான் அவருக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பே தேடி வந்தது. திரைப்படங்களில் நடித்து முறையான நடிகையாக பிரபலமாக வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தால் முறையாக கதக் பயிற்சி பெற்று வருகிறார்.

மாடல் அழகி என்பதால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையே தவிடு பொடியாக்குபவர் மாளவிகா சர்மா.

அந்த நடிகருடன்…. ப்ளீச்னு சொன்ன மாளவிகா:

அவரது கிளாமர் அழகான புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா சர்மாவிடம்,

நீங்கள் ஏதேனும் ஒரு தமிழ் நடிகருடன் டேட்டிங் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டால் அது எந்த நடிகராக இருக்கும் என கேள்வி கேட்டதற்கு நான் சிவகார்த்திகேயனுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன் என கூறியிருந்தார்.

மேலும், விஜய்யுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என தனது ஆசையை தெரிவித்திருந்தார். டேட்டிங் செல்லும்போது அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் என்ன கேட்பீர்கள்?என கேட்டதற்கு,

நான் ஒன்றுமே கேட்க மாட்டேன். அவர்களுடன் சென்று கியூட்டாக சில போட்டோக்களை எடுத்துக் கொண்டு வருவேன். அவ்வளவுதான் அவங்களை பார்த்தாலே எனக்கு போதும் என மாளவிகா சர்மா கூறியிருந்தார்.

இதை அடுத்து மாளவிகாவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் படங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam