தெலுங்கு திரைப்படத்தில் பிரபல நட்சத்திர ஹீரோவாக சிறந்து விளங்கி வரும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீ லீலா.
குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற “குர்ச்சி மடத்தப்பட்டி” பாடலுக்கு தீயாக வெறித்தனமாக ஆட்டம் போட்ட ஸ்ரீ லீலாவின் நடனம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
நடிகை ஸ்ரீ லீலா:
யார் இந்த நடிகை? என தேடிச் சென்று பார்க்கும் அளவுக்கு ஸ்ரீ லீலாவின் குர்ச்சி மடத்தப்பட்டி டான்ஸ் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றது .
ஸ்ரீ லீலாவின் அதிரடியான அந்த நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மளமளவென கூடி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஸ்ரீவிலா.
இந்த பாடலின் மூலம் ஸ்ரீ லீலாவின் மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து குவிய தொடங்கியது.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லீலா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தினராக வாழ்ந்து வருகிறார்.
நல்ல அழகான தோற்றம், பவ்யமான முக ஜாடை, க்யூட்டான நடிப்பு உள்ளிட்டவற்றால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தற்போது ஸ்ரீலிலா பார்க்கப்பட்டு வருகிறார்.
சிறு வயதிலேயே பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் முறையாக நடன பயிற்சி கற்றுக்கொண்டு நடந்த கலைஞராக தென்பட்டு வருகிறார்.
வெறும் 22 வயதே ஆகும் ஸ்ரீலிலா இரண்டு ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருகிறார் என்பது மிகப்பெரிய பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் அறிமுகம்:
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரீலிலா முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கிஸ்” என்ற கன்னட மொழி திரைப்படத்தில் நடித்துதான் நடிகையாக அறிமுகமானார் .
அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது பெற்றார். முதல் படத்திலிருந்து நல்ல அழகான தோற்றம், வசீகரமான அழகு , ஒல்லி பெல்லி அழகு, கியூட்டான நடிப்பு, எக்ஸ்பிரஷன் குயின் உள்ளிட்டவற்றால் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
ஸ்ரீ லீலாவுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார் .
இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பின் இதுவரை உலக அளவில் பேமஸ் ஆக்கியது என்னமோ மகேஷ் பாபுவுடன் நடித்த குண்டூர் காரம் திரைப்படம் தான்.
உலக புகழ் தேடித்தந்த ” குண்டூர் காரம்”
அந்த திரைப்படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தெலுங்கு சினிமாவில் முன்னாடி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவின் “பகவந்த் கேசரி” என்ற திரைப்படத்தில் அவரின் மகளாக கமிட்டாகி ஸ்ரீலிலா நடித்து வருகிறார்.
இப்படத்தின் விழாவில் பேசிய நடிகரான பாலகிருஷ்ணா ஸ்டீலாவுக்கு 22 வயசுதான் ஆகுது. அவர் இந்த திரைப்படத்தில் எனக்கு மகளாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் என்னை மாமா மாமா தான் என்று தான் அழைப்பார்.
ஸ்ரீலீலாவை எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அடுத்த படத்தில் ஸ்ரீலங்காவுடன் நான் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
பாலகிருஷ்ணாவின் மட்டமான ஆசை:
மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையை இப்படி வெளிப்படையாக கூறி இருப்பதால் பாலகிருஷ்ணாவை பல விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.
இதை அறிந்த தமிழ் ரசிகர்கள் தெலுங்கு நடிகர்களே இப்படித்தான் மிகவும் மோசமான மனுஷங்க என விமர்சித்து வருகிறார்கள் .
முன்னதாக விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த “உப்பண்ணா” திரைப்படத்தில் அவரது மகளாக. கீர்த்தி செட்டி நடித்திருந்தார் .
அதன் பிறகு கீர்த்தி செட்டியுடன் நான் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறியிருந்தார். அவருடன் காரணம் அவருடன் மகளாக நடித்து விட்டதால் அவருடன் ஜோடியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை என கூறி இருந்தது மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்பட்டது.
இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என தெலுங்கு சினிமாவை தாக்கி பேசி வருகிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.