நார்மல் டெலிவரியை பார்த்து பிரசவம் பண்ண டாக்டரே மிரண்டு போயிட்டாங்க.. காயத்ரி யுவராஜ் கணவர்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த காயத்ரி யுவராஜ் 1988 பிறந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து முடித்தார்.

இதனை அடுத்து தமிழ் தொலைக்காட்சி துறையில் பணி புரிய ஆரம்பித்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடிகையாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த தொடரில் நடிகையாக அறிமுகமானார்.

காயத்ரி யுவராஜ்..

சீரியலில் நடித்ததோடு மட்டுமல்லாமல் காயத்ரி யுவராஜ் முதன் முதலாக தொலைக்காட்சியில் தோன்றிய நடன நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிலாடிஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் இவர் பிரியசகி, அழகி, மோகினி, களத்து வீடு மற்றும் அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் அண்மையில் இவர் புது வீடு கட்டி பால் காய்ச்சிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நார்மல் டெலிவரியை பார்த்து..

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய கணவருடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவருடைய கணவர் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தும் தங்களுடைய குடும்பம் குறித்தும் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.

அதில் குறிப்பிடும் படியாக காயத்ரி யுவராஜிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.அதில் காயத்ரி யுவராஜின் கணவர் கூறியதாவது காயத்ரி யுவராஜின் பிரசவம் முடிந்த பிறகு மருத்துவர் தன்னை சந்தித்தார்.

அவர் அப்போது என்னிடம் நான் செய்த பிரசவத்திலேயே இது தான் மிகவும் எளிமையான பிரசவமாக இருந்தது. மேலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவ்வளவு எளிமையாக பிரசவத்தை முடித்து விட்டோம் என கூறியது எனக்கு வியப்பாக இருந்தது என மிரண்டு போனார். நானும் என்ன காரணம் என்று கேட்டேன்.

பிரசவம் பார்த்த டாக்டர் மிரண்ட சம்பவம்..

நான் காயத்ரி யுவராஜின் பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சுகப்பிரசவம் ஆவதற்கு உண்டான சரியான உடற்பயிற்சிகளை அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன்.

அதை எதையும் தட்டிக் கழிக்காமல் அப்படியே காயத்ரி செய்தாள் அதன் பயனாகத் தான் அவளுக்கு நார்மல் டெலிவரி எளிமையாக முடிந்தது என பேசி இருக்கிறார் காயத்ரியின் கணவர்.

இதன் மூலம் சுகப்பிரசவம் பெற நினைக்கும் பெண்கள் அவர்களுடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தை சாத்தியமாக்க முடியும். அத்துடன் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் குழந்தை பெற்று எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனை அடுத்து பெண்கள் அனைவரும் இந்த கருத்தினை நன்கு உள்வாங்கிக் கொண்டதோடு பிரசவ காலத்தில் மட்டுமல்ல கர்ப்பம் ஆன பிறகு மருத்துவ ஆலோசனையோடு இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதால் எளிதில் சுகப்பிரசவம் ஆக முடியும் என்ற விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேறு சில ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பெண்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைக் குறித்து அவர்கள் சீரிய முறையில் பேசி இது போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதை சொல்லி இருப்பதோடு இந்த விஷயத்தை ஓபன் ஆக சொன்ன காயத்ரி யுவராஜை பாராட்டி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam