லிப்லாக் காட்சி.. ரொமான்ஸ் பண்ணும் போது முன்னணி நடிகர் என்னிடம் கூறிய விஷயம்.. ஊர்வசி ஓப்பன் டாக்..!

ஒரு சில நடிகைகளை வாழ்க்கையில் கடைசி வரை நம்மால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை நடித்து தனக்கான இடத்தை அவ்வளவு ஆழமாக தக்க வைத்து விடுவார்கள் .

மக்களின் மனதிலும் மிக அழுத்தமான இடத்தை பிடித்து விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஊர்வசி .

நடிகை ஊர்வசி:

இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் முதன் முதலில் இவர் நடித்தது என்னவோ தமிழ் படங்களில் தான் .

அதன் பிறகு தான் கேரளா சினிமாவுக்கு நான் சென்றேன் என்ற உண்மையை ஊர்வசி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார் .

இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

முதன் முதலில் தனது அக்காவான கல்பனாவுக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு தான் ஊர்வசியின் திறமையை பார்த்து கிடைத்ததாம்.

“முந்தானை முடிச்சு ” அறிமுகம்:

ஆம், கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த “முந்தானை முடிச்சு ” என்கிற திரைப்படத்தின் ஆடிஷனுக்காக பாக்கியராஜ் அவர்கள் ஊர்வசியின் சகோதரியான கல்பனாவை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்.

அப்போது பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்த ஊர்வசி பள்ளி சீருடைகளிலேயே அக்காவுடன் அந்த ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில் கல்பனா டயலாக் பேசமுடியாமல் திக்கி திணறியிருக்கிறார். உடனே அந்த பேப்பரை வெடுக்குனு பிடுங்கிய ஊர்வசி கடகடவென மொத்த பேப்பரையும் படித்து காட்டி இப்படிதான் பேசணும் என கூறினாராம்.

அதை பார்த்து பாக்கியராஜ் கைதட்டி இருக்கிறார். பின்னர் கல்பனா இந்த படத்திற்கு சரியாக வரவில்லை என தெரிந்து கொண்ட பாக்கியராஜ் தொடர்ந்து நடிகைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் யாரும் அவருக்கு சரியாக படவில்லை. பின்னர் ஆடிஷன் போது அந்த டயலாக்கை வாசித்த பெண்ணே சிறப்பாக இருப்பார் என தோன்ற ஊர்வசியை ” முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் நடிக்க வைத்தாராம் பாக்யராஜ் .

இப்படித்தான் ஊர்வசியின் நடிப்பு பயணம் ஆரம்பித்ததாம். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

அது அவரது முதல் படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய அலாதி திறமையை அதில் வெளிகாட்டி மிகச்சிறந்த நடிகையாக தென்பட்டிருப்பார்.

லிப்லாக் காட்சியில் ஊர்வசியிடம் கமல்….

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க இங்கு நட்சத்திர நடிகை ஆனதோடு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தான் கமல்ஹாசனின் நடித்த முத்த காட்சி மற்றும் ரொமான்ஸ் காட்சியின் அனுபவங்களை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது எனக்கு ஆரம்பத்தில் இருந்து மலையாள படங்களிலும் மற்றும் தெலுங்கு படங்களிலும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வந்தது .

மேலும் பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்தது. நான் பார்ப்பதற்கு தமிழ் பெண் போன்றே இருக்க மாட்டேன் .ஆதலால் எனக்கு பிற மொழிகளில் இருந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது .

ஆனால் அந்த ரோல்கள் எனக்கு மிகவும் கவர்ச்சியான ரோல்களாக கொடுக்கப்பட்டது. அதனால் நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என கூறி அந்த வாய்ப்புகளை நிராகரித்து தமிழ் படங்களிலேயே அதிகமாக நடித்து வந்தேன்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கமல்ஹாசன் நீங்கள் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் ஊர்வசி, அதனால் என்னால் உங்களுடன் ரொமான்டிக் காட்சி லவ் சீன்ஸ், கிளாமர் சீன் உள்ளிட்டவற்றில் நடிக்க கூச்சமாக இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சம் மலையாள படங்களிலும் கவனம் செலுத்துங்கள். நல்ல வாய்ப்பு வந்தால் விட்டு விடாதீர்கள் என்ற அட்வைசெய்தார். அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தேன் என ஊர்வசி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam