தென்னிந்தியா சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .
இவர் சிறந்த நடிகைக்காக தென் இந்திய பிலிம் பேர் விருதுகள் , நந்தி விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்று பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்:
ரம்யா கிருஷ்ணன் மிகவும் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தொடர்ச்சியாக அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் திறமையும் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே இருந்தது.
இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவற்றில் மிகச்சிறந்த நடன கலைஞராக இருந்து வந்தார்.
ரம்யா கிருஷ்ணன் பல மேடைகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றவராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆன கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறா. 14 வயதிலேயே தனது நடிப்புத் துறையை ஆரம்பித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ச்சியாக வெல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .
மகுடம் சூட்டிய பாகுபலி படம்:
80ஸ் காலத்தில் தனது நடிப்புத் திறமை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .
அதன் பிறகு ஹீரோயின் ஆக நடித்து வந்த அவர் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதா சிவகாமி தேவியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
அப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இருந்தது .அந்த படம் அவருக்கு பெரும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.
சிறந்த நடிகையாக இருந்து கொண்டே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
படப்பிடிப்பு தளத்தில் மோசமான அனுபவம்:
இந்நிலையில் தற்போது 53 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது வரை தனக்கான மார்க்கெட் குறையாமல் மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
மிகவும் போல்டான தைரியமான குணசத்திர கதாபாத்திரம் என்றால் உடனடியாக ரம்யா கிருஷ்ணன் எல்லா இயக்குனர்களின் ஞாபகத்திற்கு வந்திடுவார்.
அந்த வகையில் தற்போது வரை தனது மார்க்கெட்டை விடாமல் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் .
ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தன்னுடைய மோசமான அனுபவத்தைக் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அதாவது, நான் படப்பிடிப்பு ஒன்றிற்காக காட்டுப்பகுதிக்கு சென்றபோது அங்கே நிலவிய அதீத வெப்பம் காரணமாக எனக்கும் கலா மாஸ்டருக்கும் பேதி ஆகிவிட்டது .
அந்த காலத்தில் முறையான கேரவன் வசதி கூட கிடையாது. அந்த இடத்தில் பாத்ரூம் வசதியும் இல்லை உடைய மற்ற வேண்டும் என்றாலே அருகில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் அனுமதி கேட்டு தான் உடை மாற்ற வேண்டும் .
அப்படியான சூழ்நிலையில் இருவருக்கும் பேதி ஆகிவிட்டது. பாத்ரூம் வசதி வேற இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் நடுக்காட்டில் அங்கும் இங்கும் ஓடினோம் .
இப்படி எல்லாம் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறோம். நானும் கலா மாஸ்டரும் படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அப்பால் சென்று தான் எங்களுடைய இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய சூழ்நிலை.
நடுக்காட்டில் இயற்கை உபாதை கழித்த ரம்யா கிருஷ்ணன்:
அங்கே யார் எப்போது வருவார்கள் என்று எதுவும் தெரியாது இப்படி நடுக்காட்டில் நடன இயக்குனர் கலா மாஸ்டருடன் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் .
அனைத்தையும் கூறிவிட்டு எல்லாம் சரிதான் எனக்கு லூஸ் மோஷன் ஆன விஷயத்தை நான் கூறிவிட்டேன் இதை தயவுசெய்து ஒளிபரப்பாதீர்கள் என்று கே பி ஒய் பாலாவிடம் கெஞ்சுகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் .
இதனை கேட்ட கேள்வி பாலா கவலைப்படாதீங்க மேடம் நீங்க லூஸ் மோஷன் போனதை நாங்கள் ஸ்லோமோஷனில் காட்டி இந்த நிகழ்ச்சியை ஹிட்டாகி விடுவோம் என கலாய்த்து இருக்கிறார்.