அடங்கொ… கொலை செய்த வழக்கில் பிரபல நடிகர் தர்ஷன் கைது..! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

கன்னடத்தில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தர்ஷன் தொகுதீபா. 2001 முதலே கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராக இவர் இருந்து வருகிறார்.

இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் அதை பயன்படுத்தி மிக எளிதாகவே சினிமாவிற்குள் வந்தவர்தான் நடிகர் தர்ஷன். அதனை தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் 2023 ஆம் ஆண்டு வரையிலுமே இவர் நடிப்பில் திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

கன்னட நடிகர் சர்ச்சை:

இந்த நிலையில் தற்சமயம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் தர்ஷன். தர்ஷன் கன்னட நடிகை ஆன பவித்ரா கௌடாவை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தார். இவர்கள் இருவருமே இணைந்து சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவரை தர்ஷன் கொலை செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருடன் சேர்ந்து இன்னும் பத்து பேர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறி பத்து பேரையுமே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து இருக்கிறது போலீஸ்.

47 வயதுடைய நடிகர் தர்ஷன் அவரது மனைவி தொடர்பான பிரச்சனை காரணமாக அந்த நபரை கொலை செய்து விட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இவர் 33 வயது உடைய ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவிக்காக செய்த கொலை:

ரேணுகா சுவாமி என்பவர் ஒரு மெடிக்கலில் பணிபுரிந்து வரும் சாதாரண நபராவார். அவர் எதற்காக கன்னட நடிகரால் கொலை செய்யப்பட்டார் என்பது பலருக்கும் கேள்வி எழுப்பும் விஷயமாக இருந்து வருகிறது.

அவரது கொலை குறித்து விசாரணை செய்து வந்த போலீஸ் ரேணுகா சுவாமியின் மொபைல் ஃபோனை எடுத்து பார்த்த பொழுது அதில் அவர் தொடர்ந்து தர்ஷனின் மனைவிக்கு தவறாக மெசேஜ் அனுப்பி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தர்ஷன்தான் இந்த கொலைக்கு காரணமாக இருக்க முடியும் என்று போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து மேற்படி விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு தர்ஷனுடன் சேர்ந்து இன்னும் பத்து பேர் மீது சந்தேகம் ஏற்படவே அவர்கள் அனைவரையும் தற்சமயம் கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்சமயம் கன்னட சினிமாவில் பெரும் பேசு பொருளாக இந்த சம்பவம் மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam