சினிமாவை பொறுத்த வரை தங்களது முன்னோர்கள் தாத்தா, அப்பா இப்படி குடும்பத்தில் பெரிய நட்சத்திர ஹீரோவாக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் கூட தங்களுக்கு திறமை இல்லை என்றால் சினிமாவில் ஜொலித்து நிற்கவே முடியாது .
அதற்கு முக்கியமான எடுத்துக்காட்டான நபராக பார்க்கப்படுபவர் விக்ரம் பிரபு. இவர் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தை சேர்ந்த பிரபலமான நடிகர் என்றாலும் கூட இவரால் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து உச்ச மார்க்கெட் எட்டிப் பிடிக்க முடியவில்லை .
நடிகர் விக்ரம் பிரபு:
இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமாக இருந்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி திரைப்படத்தின் முதன்முதலாக நடித்திருந்தார் .
முதல் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றியை குவித்ததால் விக்ரம் பிரபுவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால், அதை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் அவருக்கு வெற்றி படமாக மிகப்பெரிய அளவில் பெயர் சொல்லும் வகையில் எதுவும் அமையவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து முயற்சி கைவிடாமல் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை, இது என்ன மாயம் ,வாகா, நெருப்புடா , புலிகுத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் விக்ரம் திரைப்படம் நடித்திருக்கிறார்.
வாரிசு நடிகராக இருந்தும் வாய்ப்பு கிடைக்ல:
மிகப்பெரிய அந்த நட்சத்திர அந்தஸை சேர்ந்த குடும்ப வாரிசாக இருந்தாலும் இவருக்கு நல்ல கதைகள் தொடர்ந்து தேடி வராமல் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் அப்படியே முடங்கி போகி இருக்கிறார்.
லண்டனில் மேற்படிப்பு படித்து விட்டு சென்னைக்கு திரும்பிய விக்ரம் பிரபு சந்திரமுகி திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் .
இவர் “சர்வம்” திரைப்படத்தின் தயாரிப்பின் போது விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
அத்துடன் லிங்குசாமி தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .
இந்த படத்தில் தான் யானைகளின் வளர்ப்பாகத்திற்கு சென்று யானைகளுடன் பழகி பாகன்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? யானை பாகன்களுடன் எப்படி நடந்து கொள்கிறது? யானை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று முழுமையாக கற்றுத் தெரிந்து அதன் பின்னர் முறையாக அந்த படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
விக்ரம் பிரபுவின் காதல் திருமணம்:
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே லட்சுமி உச்சாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்களது திருமணத்தில் திரைத்துறையினரும் அரசியல் பிரபலங்களும் பெருமளவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் மனைவி யார்? என்பதை குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
விக்ரம் பிரபுவின் மனைவி லட்சுமி உட்சானி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் பெரிய கோடீஸ்வரி.
விக்ரம் பிரபுவின் மனைவி யார்?
ஆம், சேலத்தில் இருக்கும் “எஸ் எஸ் எம் காலேஜ் ஆஃப் பார்மசி” என்று அந்த காலேஜின் உரிமையாளரே லட்சுமி உட்சானியின் தந்தை தான்.
லட்சுமி உச்சனியின் தந்தையான மதிவாணனும் பிரபுவும் நீண்ட நாள் நண்பர்களாம். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடும்பமாக சந்திக்கும் போது அவரின் மகளான லட்சுமி உட்சானியை மீட் பண்ணும் நிறைய வாய்ப்புகள் விக்ரம் பிரபுவுக்கு கிடைத்த வந்திருக்கிறது.
அந்த சமயத்தில் தான் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்ததாம். பின்னர் இரு வீட்டிலும் தங்களது காதலை வெளிப்படுத்த உடனடியாக இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள்.
இது குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு திருமணம் நடக்கும் போது விக்ரம் பிரபுவுக்கு வயசு பெரும் 20 தான் என்பது குறிப்பிடத்தக்கது.