கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய ராஷ்மிகா மந்தானா கர்நாடகாவில் இருக்கும் குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் பிறந்தவர்.
இவர் தனது பள்ளி படிப்பை கூர்க் பொதுப்பள்ளியில் படித்ததை அடுத்து பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை படித்திருக்கிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா..
தற்போது இந்தியாவின் கிரஷ் யார் என்று கேட்டால் அனைவரும் சொல்ல கூடியவர் நடிகை ராஷ்மிகா. இவர் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் கன்னடத்தில் வெளி வந்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதோடு நல்ல புகழையும் பெற்றார்.
அத்தோடு சமக் படத்தில் நடித்ததற்காக 65-ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் இவருக்கு கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை அடுத்து 2018-இல் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய தேவார கொண்டாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் ஃபேமஸ் ஆனார்.
தமிழைப் பொறுத்த வரை 2021-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளி வந்த சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து இவர் எதிர்பார்த்த அளவு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.
தமிழில் ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரையும் அசர வைத்திருந்தாலும் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சின்ன வயதில் இந்த பழக்கம்..
மேலும் 2021-ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனன் ஜோடி போட்டு நடித்த இவருக்கு இந்த திரைப்படம் திரையுலக வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி தந்த படங்களில் ஒன்றாக மாறியது.
இப்போது தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா சின்ன வயதில் இருந்தே தனக்கு இந்த பழக்கம் உள்ளது என்பதை ஓபன் ஆக சொல்லியதை அடுத்து ரசிகர்கள் பலரும் அப்படி என்ன பழக்கமது என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தப் பழக்கம் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்தப் பழக்கம் சிறு வயது முதலே வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பழக்கம் தான்.
அந்த வகையில் இவர் வீட்டில் உள்ள பெற்றோர்கள் மட்டுமல்லாமல் வயதில் மூத்த வீட்டு வேலையாட்களிடமும் ஆசீர்வாதம் வாங்கக் கூடிய பழக்கத்தை கொண்டு இருப்பதாக ராஷ்மிகா கூறி இருக்கிறார்.
ராஷ்மிகாவின் ஓப்பன் டாக்..
இவர் இப்படி வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் மூத்த வேலையாட்கள் வரை ஆசீர்வாதம் வாங்குவேன் என்று ஓபனாக சொன்ன விஷயமானது இன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அது மட்டுமல்லாமல் ராஷ்மிகாவின் இந்த பழக்கம் தான் இவரை உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
எனவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய எதிர்கால தலைமுறையினர் மூத்தவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோல ஆசிர்வாதங்களை பெறுவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும் என்பதை ராஷ்மிகாவின் ஓபன் டாப் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.