வெங்காயத் துவையல்.

எந்த விதமான சாதம் என்றாலும் இந்தத் துவையல் இருந்தால் போதும் தட்டில் போட்டு வைத்த சாதம் அனைத்தும் நொடியில் காலியாகி விடுவது உறுதி. அப்படிப்பட்ட சுவையான வெங்காய துவையல் எப்படி செய்யலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

வெங்காயத் துவையல் செய்வதற்கு தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் 100 கிராம்
  • உளுந்து பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி 
  • மிளகாய் வற்றல் 

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயத்தை எண்ணெயில் விட்டு நன்கு வதக்கிக் கொண்டு பிறகு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி ஆகியவற்றை சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இத்துடன் ஒரு கொட்டை புளி, தேவையான அளவு உப்பு, பருப்பு இவற்றை சேர்த்து முதலில் அழைக்கவேண்டும். இது பாதி அரைத்தவுடன் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதன் பின்னர் கடைசியாக வாணலியில் கடுகு தாளித்து அதில் போட்டு அரைத்து வைத்த இந்த துவையளை போட்டு நன்றாக வதக்கவும். இதுபோல் செய்தால் இந்தத் துவையல் இரண்டு நாள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

வெளியூர் செல்பவர்கள் மற்றும் ரயில் பயணத்திற்கு மிக ஏற்ற சுவையான துவையல் இந்த வெங்காயத் துவையல் என்று கூறலாம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடியது இந்த துவையல் உடலுக்கு மிகவும் சக்தியை அளிக்கக் கூடியது.

சின்னவெங்காயம் என்பதால் சிறு குழந்தைகளுக்கு இதை கொடுக்க பழக்குங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு கூடும் இதன் மூலம் என்பதை உணருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …