சர்ச்சை பிரபலத்தை பிக்பாஸ் 8ல் களமிறக்கும் விஜய் டிவி..! எத்தனை வழக்கு போடப்போறாங்கன்னு தெரியல…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பெரிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். திறமைசாலிகளுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக இருக்கக்கூடிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை 7 சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ்  8 சீசனை நோக்கி முன்னேறி உள்ளது.

அந்த வகையில் ஏழாவது சீசன் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்து பல்வேறு விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இந்த ஏழாவது சீசனில் கமலஹாசன், மாயா, பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக இருந்தார் என்று கலவை ரீதியான விமர்சனங்கள் வந்தது.

பிக் பாஸ் 8 ல் களம் இறங்கும் சர்ச்சை பிரபலம்..

இதனை அடுத்து பிக் பாஸ் 7 குறித்து பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் நெட்டிசன்கள் தினம் தினம் பல்வேறு வகைகளில் சொல்லி வந்தார்கள். மேலும் சிலர் கடுமையாக கமலஹாசனை ட்ரோல் செய்திருந்தார்கள்.

தற்போது பிக் பாஸ் சீசன் 8 காண பணிகளை துவங்கி இருப்பதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. மேலும் இதில் பங்கு பெறக் கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையும் துவங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் டி டி எஃப் வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக செய்திகள் கசிந்து வருகிறது.

மேலும் அவரது காதலி ஷாலின் ஸோயா தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகச் சிறப்பான பிரபலத்தையும் பெயரையும் பெற்றிருக்கிறார்.

எத்தனை வழக்கு போடப் போறாங்க..

ஏற்கனவே பைக் ரேஸ் மூலம் மக்களைக் கவர்ந்த இவர் தன்னுடைய youtube சேனலில் வித விதமான பைக்குகளில் ரைடு செய்யும் வீடியோக்களை போட்டு எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர் என்பது உங்களுக்கு தெரியும்.

எனவே தற்போது டிடிஎஃப் வாசன் மற்றும் அவர் காதலில் இருவருமே பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் பெருமளவு நடந்து வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

மேலும் ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் களம் இறங்கும் அவர் மீது இன்னும் எத்தனை வழக்குகள் போடப்படுமோ? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய சுனாமியில் ஏற்படுத்தி உள்ளது. எனவே விரைவில் பிக் பாஸ் எட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் இது குறித்து தொடர்ந்து அவர்கள் நண்பர்களோடு பேசி வருகிறார்கள்.

அட பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது..

இதனை அடுத்து பிக்பாஸ் 8 வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு டிடிஎஃப் வாசன் மற்றும் அவர் காதலி கண்டிப்பாக இந்த சோவில் போட்டியாளர்களாக பங்கைப்பார்களா? என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரும் என்பதை உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam