பல காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சை நடிகையாக பலராலும் அறியப்பட்டவர் நடிகை ஷகிலா. 1990களில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வந்தவர்தான் ஷகிலா.
1994 ஆம் ஆண்டு வந்த ப்ளே கேர்ள்ஸ் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் திரையுரகில் கதாநாயகியாக அறிமுகமானார். முதன் முதலில் இவர் நடித்த திரைப்படம் தமிழில்தான் என்றாலும் போகப்போக இவருக்கு மலையாளத்தில்தான் அதிக மார்க்கெட் இருந்தது.
துவக்கத்தில் ஒரு கவர்ச்சி நடிகையாகத்தான் ஷகிலா அறிமுகமானார். கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதா மாதிரியே இவருக்கும் மார்க்கெட் இருந்தது. ஆனால் மலையாளத்திற்கு சென்ற பிறகு இன்னும் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் நடிகை ஷகிலா.
மலையாளத்தில் வரவேற்பு:
அந்த கவர்ச்சிக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கவே ஏகபோகமான வரவேற்பை பெற்றார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் நடிப்பதை காட்டிலும் ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்தார் ஷகிலா.
2001 ஆம் ஆண்டு மட்டுமே 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பிற்காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு கேலிக்கு உரித்தான கதாபாத்திரமாக ஷகிலா மாறினார். அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி மாதிரியான திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் ஷகிலா வந்தாலும் தொடர்ந்து அவரை தவறான கண்ணோட்டத்தில் காட்டி வந்தனர் தமிழ் இயக்குனர்கள்.
மாறிய அடையாளம்:
இந்த நிலையில் சின்னத்திரைதான் ஷகிலாவின் அடையாளத்தை மாற்றி அமைத்தது என்று கூறலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு ஷகிலாவின் அடையாளம் என்பது தற்சமயம் உள்ள தலைமுறைகள் மத்தியில் மாறியது.
அதனை தொடர்ந்து ஷகிலாவிற்கு கொஞ்சம் அங்கீகாரமும் கிடைக்க துவங்கியது. தற்சமயம் யூ ட்யூப் பேட்டிகளை எடுத்து வரும் தொகுப்பாளராக இருந்து வருகிறார் ஷகிலா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷகிலாவிடம் கேட்கும் பொழுது ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டது.
அப்பொழுது அதற்கு பதில் அளித்த ஷகிலா “எனக்கு 13 வயதாக இருக்கும் பொழுது எனக்கு வேறு ஒரு துணை வேண்டாம் என்று நான் முடிவு செய்து விட்டேன். மேலும் எனக்கு மது மற்றும் புகைப்பழக்கத்தில் அதிக ஈடுபாடு இருந்தது.
முதலில் இதை சாதாரணமாக ஆரம்பித்தாலும் பிறகு நான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன் என்றுதான் கூற வேண்டும். தினமும் மது அருந்தினால்தான் என்னால் தூங்க முடியும் என்கிற ஒரு நிலை ஏற்பட்டது.
இப்படி ஒரு பழக்கம் எனக்கு இருக்கும் பொழுது ஏன் இன்னொருவரை திருமணம் செய்து அவருடைய மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனால்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறுகிறார் நடிகை ஷகிலா.