அந்த விஷயத்தில் ராஷ்மிகாவை மிஞ்சிய எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.! வாயடைத்து போன ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளை விட பெண்கள் மத்தியில் பிரபலமானவர்களாக எப்போதும் சீரியல் நடிகைகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சில சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மதுமிதா.

மதுமிதா தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படப்பிடிப்பிற்கு பிறகு தொடர்ந்து கர்நாடக சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தார்.

ஆனால் அதற்கு அதிக போட்டிகள் இருந்து வந்ததால் சின்ன திரையில் அவரது முயற்சியை துவங்கினார். அந்த வகையில் கலர்ஸ் கன்னடா சேனலில் 2017 ஆம் ஆண்டு ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியல் ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பானது.

கன்னட சீரியல் வாய்ப்பு:

சீரியல்களை பொறுத்த வரையில் அதன் வெற்றியை பொருத்துதான் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்பது கிடைக்கும். குறைந்தது ஒரு சீரியல் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடினால்தான் அது கொஞ்சம் வெற்றி பெற்ற சீரியலாக அறியப்படும்.

அப்படி இருந்தாலும் கூட நடிகை மதுமிதாவிற்கு அடுத்த சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியல் ஆரம்பித்து உடனே முடிந்து விட்டது. தொடர்ந்து மூன்றாவதாக அவர் நடித்த ஜெய் ஹனு என்கிற சீரியலும் ஒரு வருட காலமே ஒலிபரப்பானது.

நடிகை மதுமிதாவின் ராசியோ என்னவோ தெரியவில்லை அவர் நடிக்கும் பெரும்பாலான சீரியல்கள் ஒரு வருடம் மட்டுமே ஒடி அதன் பிறகு நிறைவடைந்த சீரியல்களாகவே இருந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ் சீரியல்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் பல வருடங்கள் நீடிக்க கூடியவை என்பதை அறிந்தார் மதுமிதா.

சன் டிவியில் எண்ட்ரி:

தொடர்ந்து தமிழில் சீரியலில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் மதுமிதா. ஜனனி கதாபாத்திரம்தான் மொத்த கதையையும் கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருந்தது.

 அதுவரை அடிமையாக வாழ்ந்து வந்த பெண்களுக்கு மாற்றத்தை கொண்டு வரும் ஒரு கதாபாத்திரமாக ஜனனி கதாபாத்திரம் இருந்ததால் தமிழ் மக்கள் மத்தியில் அந்த கதாபாத்திரத்திற்கும் மதுமிதாவிற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நாடகங்களில் புடவை கட்டி நடித்து வந்தாலும் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மதுமிதா.

அந்த வகையில் சமீபத்தில் புஷ்பா படத்தில் வரும் பாடலுக்கு ராஷ்மீகாவை மிஞ்சும் அளவில் நடனம் ஒன்றை ஆடி வெளியிட்டிருந்தார் மதுமிதா. அதில் அவருடன் சேர்ந்து ஆடும் ஆண் நண்பர் யார் என்பது தான் இப்பொழுது சமூக வலைதளங்களில் கேள்வி ஆகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam