தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும், சிறந்த நடன கலைஞராகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் .
இவர் திரையதுறை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு சினமாவில் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் ஒரு நடிகராக பாராட்டப்பட கூடியவராக இருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ்:
முதன் முதலில் குரூப் டான்ஸ் பல்வேறு திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடனம் ஆடி வந்த ராகவா லாரன்ஸ் பின்னர் படிப்படியாக தனது நடன திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார் .
1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படத்தில் பின்னணி நடன கலைஞராகத்தான் இவரது திரைத்துறை பயணம் ஆரம்பித்தது.
அதை அடுத்து தொடர்ந்து டான்ஸர் ஆகவும், கௌரவ தோற்றத்திலும், முதன்மை தோற்றத்திலும், ஹீரோவாகவும் நடிக்க துவங்கி பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்தார் .
முதலில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி சின்ன மேடம், அமர்க்களம், பார்த்தேன் ரசிப்பேன், உன்னை கொடு என்னை தருவேன் உள்ளிட்ட படங்களில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
லாரன்ஸின் படங்கள்:
அத்துடன் பார்த்தாலே பரவசம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம், பாபா, தென்றல், திருமலை இப்படி பல்வேறு திரைப்படங்களில் கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் முதன் முதலில் முனி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
பேய் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகர் ராஜ்கிரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
இத்திரைப்படம் ராகவா லாரன்ஸ்க்கு மிகப்பெரிய அளவில் புகழும், பெயரும் தேடித்தந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பாண்டி , ராஜாதி ராஜா , இரும்பு கோட்டை , முரட்டு சிங்கம் , காஞ்சனா காஞ்சனா 2 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி:
அடுத்தடுத்த வெற்றி படங்கள் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. குறிப்பாக காஞ்சனா திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப்பட்டு நட்சத்திர ஹீரோவாக இவரை கொண்டாட வைத்தது.
ராகவா லாரன்ஸ் சிறந்த நடிகர், சிறந்த நடன கலைஞர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான் .
அவர் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் .
பல ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவர்களின் கல்வி செலவுகளை பார்த்து வருகிறார்.
முதியோர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். உயிர் வாழும் தெய்வமாக மக்களின் கண் முன் நடமாடி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
லாரன்ஸுடன் இணைந்த KPY பாலா:
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து அவருடன் சமூகநலன் சார்ந்த, சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களை kpy பாலாவும் இணைந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் “மாற்றம்” என்ற சேவையில் இணைந்து kpy பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கைகோர்த்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
kpy பாலாவும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அதாவது ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததோடு மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவினார்.
பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய kpy பாலா… நான் இது போன்ற பல நல்ல திட்டங்கள் செய்ய வேண்டும் என நினைப்பேன்.
ஆனால், எனக்கு போதிய பணம் இல்லாததால் என்னால் செய்ய முடியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ராகவா லாரன்ஸிடம் கூறி உதவி கேட்டார்.
அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் லாரன்ஸ் உடனடியாக உதவிகளை செய்ய ஆரம்பித்தார். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து மாற்றம் என்று சேவையில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
பாலாவிடம் நான் இதை கேட்பது இல்லை:
இப்படியான நேரத்தில் KPY பாலா குறித்து மிகுந்த பெருமையோடு பேசி இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ். நான் பாலாவிடம் கணக்கு கேட்கவே மாட்டேன் என கூறியிருக்கிறார்.
அதாவது, நான் மற்ற யாரிடம் பணம் கொடுத்தாலும் அதற்கு கணக்கு கேட்பேன். ஆனால் பாலாவிடம் மட்டும் நான் கணக்கு கேட்கவே மாட்டேன் .
ஏனென்றால் அது எல்லாம் கஷ்டப்படுறவர்களுக்கு கண்டிப்பாக போய் சேரும் என எனக்கு நிச்சயம் தெரியும் என பாலாவை குறித்து மிகுந்த பெருமையோடு பேசியிருந்தால் ராகவா லாரன்ஸ் .
அவரின் இந்த பேச்சு பாலாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியதோடு பாலாவை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.