அடுத்து அரசியல் களத்திலும் சரி சினிமா களத்திலும் சரி. இரண்டிலுமே சூடு பிடிக்க போவதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போகும் நபர் என்றால் அது தளபதி விஜய் என்றுதான் கூற வேண்டும். பல காலங்களாகவே அரசியல் மீது ஈடுபாடு காட்டி வந்த விஜய் அவற்றை தனது திரைப்படங்களில் வெளிப்படுத்தி வந்தார்.
கத்தி சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வந்த விஜய் இந்த வருட துவக்கத்தில் அரசியலில் இறங்கினார். மேலும் அவருடைய கட்சியையும் தொடங்கினார்.
விஜய்யின் அரசியல் எண்ட்ரி:
தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சிக்கு பெயரிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் தொடர்ந்து 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களிலும் நடிக்கப்போவது இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய்.
இதனை தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. தொடர்ந்து அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார் விஜய்.
இதற்கென்று எக்ஸ் தளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கி தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அதில் குரல் கொடுத்து வருகிறார். மேலும் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வர துவங்கியிருக்கிறார் விஜய்.
தொடர்ந்து உதவிகள்:
இதற்கு நடுவே இடையில் கன்னியாகுமரியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது அங்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்து தந்தார் விஜய். இவை எல்லாவற்றையுமே அவருடைய சொந்த பணத்தில் செய்தார் என்பது முக்கியமான விஷயமாகும்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மீதும் ஒருவித எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் உருவாக தொடங்கி இருக்கிறது. இதற்கு நடுவே இந்த வருடம் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க சென்று விஜய் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
காமெடி செய்த பொதுசெயலாளர்:
தமிழக வெற்றி கழகத்தின் அதிகபட்சமான விஷயங்களை கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தான் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று அதிக கேளிக்கு உள்ளாகி வந்து வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய புஸ்ஸி ஆனந்த் விஜய் ரசிகர்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணமும் பக்கத்தில் விஜய் போட்டோவையும் வைத்து அதில் உனக்கு எது வேண்டும் என்று கேட்டால் நம்ம ஆளுங்க உடனே தளபதி போட்டோவைதான் எடுப்பார்கள்.
ஒரு வருஷம் கழிச்சு தினம் தினம் ஒரே தமாசா இருக்கும்..🤭😆😅#TVK_parithabangal #Tvk pic.twitter.com/QvO40bvMPs
— Bindra RD ツ (@Bindra_Offl) June 15, 2024
அந்த அளவிற்கு தளபதியின் மீது பாசம் கொண்டவர்கள் என்று பேசியிருந்தார். இதனை கேலி செய்து வரும் நெட்டிசன்கள் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தினம் தினம் ஒரே தமாசாக இருக்கப் போகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது