பிரேம்ஜி மாமியாரின் வயது என்ன என்று தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.. தூக்கம் தொலைத்த 90ஸ் கிட்ஸ்..!

இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் வாரிசுகளில் முக்கியமானவர் நடிகர் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே இருந்தார் பிரேம்ஜி.

அப்படியே அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பும் கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரேம் ஜி வெகு காலங்களாகவே சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருந்தார். திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்றும் கூறி வந்தார் இதனை அடுத்து அவர் எந்த பேட்டிக்கு சென்றாலும் அவரது திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் 45 வயது அடைந்த நிலையில் பிரேம்ஜி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக திருத்தணி முருகன் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

காதல் திருமணம்:

சினிமா பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்டமாக வரவேற்பை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் பிரேம் ஜி திருமணம் செய்திருக்கும் அந்தப் பெண் யார் என்பதுதான் அவருக்கு திருமணம் ஆன நாள் முதலே கேள்வியாக இருந்து வருகிறது.

அந்த பெண் யார் என்று பலரும் தேடி வருகின்றனர் அவர் ஒரு வங்கியில் வேலை செய்யும் ஊழியர் என்பது மட்டும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. அவரது குடும்பப் பின்னணி என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் சுவாரசியமான சில விஷயங்களை கூறியிருந்தார்.

அந்த பெண் பணக்கார வீட்டு பெண் எல்லாம் கிடையாது. அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரது தந்தை காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

நடுத்தர குடும்பம்:

சேலத்தை சேர்ந்த இந்து என்கிற அந்த பெண் பிரேம்ஜிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகினார். மெல்ல அந்த பழக்கம் காதலாக மாறியது பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்தனர்.

பிரேம்ஜியை விட அந்த பெண்ணுக்கு 20 வயது குறைவு என்றாலும் கூட அவர் காதலித்த காரணத்தினால் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்துவின் அம்மாவிற்கு பிரேம்ஜியின் வயதுதான் ஆகிறது என்று ஒரு ஷாக்கிங் தகவலை கூறியிருக்கிறார் அந்தணன்.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் ஆயிரம் சவரன் நகை போட்டு இந்த பெண்ணுக்கு திருமணம் செய்ததாக கூறப்படும் விஷயங்கள் எல்லாம் வதந்தி என்று கூறுகிறார் அந்தணன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam