90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருந்தார் .
சென்னையில் பிறந்து வளர்ந்து பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி உள்ளிட்ட நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு முறையாக பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டுள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்:
மேலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடனமாடி அசைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார் .
நெரம் புலரும் போல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கை துவங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தார்.
1985 இல் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த வெள்ளை மனசு திரைப்படம் தான் இவர் நடித்து வெளியான முதல் தமிழ் திரைப்படம்.
அப்போது அவர் 8ம் வகுப்பு தான் படித்துக் கொண்டு இருந்தார். அடுத்து தொடர்ச்சியாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.
ரஜினிகாந்த் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களோட ஜோடி போட்டு நடித்து பிரபலமான அந்தஸ்தை பிடித்தார்.
ரம்யா கிருஷ்ணனின் திரைப்படங்கள்:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் கமல்ஹாசனின் பெயர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் கேப்டன் பிரபாகரன், அம்மன் ,படையப்பா ,பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
கமலஹாசன் , ரஜினிகாந்த், சரத்குமார் ,பிரபு ,அமிதாப் பச்சன் , நாகார்ஜுனா ,ஜெகபதிபாபு ,சிரஞ்சீவி இப்படி பல தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதனிடையே அவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமா அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 53 வயதாகிறது. இன்னும் அவரது மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக குணச்சித்திர வேடங்கள் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சில தகவல் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை:
நடிகை ரம்யா கிருஷ்ணன் பார்ப்பதற்கு நல்ல அழகும், வசீகர தோற்றமும் கொண்டு பார்ப்பதற்கு இன்னும் இளமையாகவே இருந்து வருகிறார்.
மிகத் திறமை வாய்ந்த நடிகையாக ரஜினிக்கே டப் கொடுத்த நடிகையாக ஒரு காலகட்டத்தில் பார்க்கப்பட்டார்.
ரஜினியே அவரது நடிப்பை பார்த்து வியந்து போனார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் பிரபல அரசியல் புள்ளியான சோ அவர்களின் தங்கை மகள் தான்.
சோ இவருக்கு தாய் மாமன் ஆகிறார். ஆரம்பத்தில் கிளாசிக்கல் டான்ஸில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி யார் இந்த ரம்யா கிருஷ்ணன் என எல்லோரையும் தேடிச் சென்று பார்த்து வியக்க வைத்தார்.
மேலும் அம்மன் திரைப்படத்தில் தத்ரூபமாக நடித்து நிஜ அம்மனாகவே மக்களுக்கு காட்சியளித்தார். மேலும் ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் வில்லி கேரக்டரில் நீலாம்பரியாக நடித்து மிரட்டி எடுத்தார்.
அந்த படத்திற்காக தமிழக அரசு விருதும் பிலிம்பேர் விருதும் வாங்கி கௌரவிக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ண வம்சி என்ற தெலுங்கு இயக்குனரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி திரைப்படத்தில் கம்பீர பெண்மணி ஆக நடித்து. எல்லோரது கவனத்தையும் வைத்தார்.
43 வருடத்தில் 200 படங்கள்:
கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் குயின் குழுவின் என்ற தொடரில் நடித்திருந்தார் .
இந்த தொடர் மறைந்த முதல்வரான ஜெயலலிதாவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
43 வருடத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்த பிரபலமான நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு உயரிய விருதுகளையும் வாங்கி கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.