நடிகர் நடிகைகள் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சமூகப் பிரச்சினை பற்றியும் நடிகர்கள் வாய் திறந்ததாக பெரிதாக கேள்விப்பட முடியவில்லை.
அது எதனால்..? என்ன காரணம்..? என்று குறிப்பிட்டு நடிகர்கள் கூறினால் தான் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம், நடிகர்கள் குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் நம்மால் கட்டாயப்படுத்தவும் முடியாது. ஏனென்றால் நாம் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இங்கே கேள்வி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் ஆட்சி நடத்தும் போது சிறு பிரச்சனை என்றால் கூட குறிப்பிட்ட நடிகர்கள் குழுவாக சேர்ந்து சமூக வலைதளங்கள்ளில் மிகப்பெரிய பேசு பொருளாக அந்த விஷயத்தை உருவாக்குவார்கள்.
அந்த குறிப்பிட்ட நடிகர்களில் நடிகர் சூர்யா மிக முக்கியமான ஒருவர். மட்டுமில்லாமல் அவருடைய மனைவி ஜோதிகாவும் பல்வேறு பொதுநல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் தற்போது ஊரை காலி செய்து கொண்டு மும்பைக்கு போய் செட்டில் ஆகிவிட்டார். இது அவருடைய தனிப்பட்ட விஷயம்.
ஆனால் சமீப காலமாக கள்ளச்சாராய நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இது உயிர்பலிகளையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, கள்ளச்சாராயம் காரணமாக சிலர் உயிரிழந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 80-க்கும் மேற்பட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் உயிர் பிழைத்தாலும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இயலாத காரியம் என்று தெரிகிறது. இந்த விவகாரம் நாடு முழுதும் மிகப்பெரிய பேசி பொருளாக உருவெடுத்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய சாவுகள் குறித்த செய்திகள் எதுவும் கேள்விப்பட்டது கிடையாது. ஆனால் தற்போது கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.
ஆனால், அதிசயமாக இந்த விவகாரம் குறித்தோ அல்லது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையிலோ எந்த ஒரு நடிகரும் வாய் திறக்கவே இல்லை. குறிப்பாக நடிகர் சூர்யா ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.
எல்லா விஷயத்துக்கும் முதல் நாளாக மூக்கை நுழைத்து கருத்தை கூறி கைத்தட்டல் வாங்கும் நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் ஆள் எங்கே இருக்கிறார் கூட தெரியவில்லை. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நடிகர் சூரியாவை பங்கம் செய்து இணைய பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், வாழ்த்து சொல்வதற்கு மட்டும் தான் கட்சி ஆரம்பித்துள்ளீர்களா..? என்று நடிகர் விஜய்யை சீண்டியும் சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்க்க முடிகின்றது.