திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் நெருக்கமாக ரொமான்டிக் காட்சிகள் பாடல் காட்சிகளில் நடிப்பதன் மூலம் அவர்களை அறியாமலே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதல் ஆக மாறிவிடும்.
இது இக்காலத்தில் மட்டுமல்ல பழம்பெரும் காலத்தில் இருந்தே பழம்பெரும் நடிகர்கள் ஜோடியாக நடித்து பல நடிகர் நடிகைகள் இப்படியாக ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதுண்டு.
ரியல் ஜோடிகளாக திரை நட்சத்திரங்கள்:
அதற்கு பல பேர் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஜெமினி கணேசன் – சாவித்திரி, எம்ஜிஆர்-ஜெயலலிதா உள்ளிட்ட பல நட்சத்திர ஜோடிகள் உண்மையிலேயே காதலிக்க துவங்கினார்கள்.
அப்படி திரையில் நடித்துவிட்டு உண்மையிலேயே காதலிக்க துவங்கியவர்கள் லிஸ்டில் பார்க்கப்படுபவர் தான் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சோபன்பாபு – வாணிஸ்ரீ.
நடிகர் சோபன்பாபு 70 களில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார்.
கொடிகட்டி பறந்த சோபன் பாபு:
பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை தன்னுடைய சிறப்பான நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த பல்வேறு தெலுங்கு திரைப்படங்கள் இன்றளவும் அக்கட தேசத்து ரசிகர்களின் ஃபேவரட்டான திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது.
இவர் 1958 ஆம் ஆண்டு சாந்தகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்ட சோபன் பாபுவிற்கு மொத்தம் 4 பிள்ளைகள்.
ஆனால்,திருமணத்திற்கு முன்னர் சோபன்பாபு திரைப்படங்களில் நடிக்கும் போது பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.
ஜெயலலிதா – சோபன் பாபு உறவு:
அதில் முக்கியமானவர் தான் நடிகை ஜெயலலிதா. ஆம்,ஜெயலலிதாவும் சோபன்பாபுவும் சில ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் பிரிந்து விட்டனர்.இது உண்மை சம்பவம்.
இந்நிலையில் தற்போது ஷோபன் பாபு மற்றும் நடிகை வாணி ஸ்ரீ இடையே நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவத்தை குறித்து பிரபல எழுத்தாளரான “கனகலா ஜெயக்குமார்” சமீபத்திய பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
பழம்பெரும் இயக்குனரான கே. விஸ்வநாத் இயக்கத்தில் “செல்லெலி கபுரம்”என்ற திரைப்படத்தில் ஷோபன் பாபு மற்றும் நடிகை வாணிஸ்ரீ இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் ஒரு காட்சியில் கவிதைகள் எழுதி தங்கையை திருமணம் செய்ய நினைக்கும் மூத்த சகோதரனின் கதை தான் இந்த படம்.
பாடலில் தவறான அர்த்தம்:
வாணிஸ்ரீ தன்னை அறியாமல் ஷோபன் பாபுவை காதலிக்கிறார். கிளைமாக்சில் வரும் பாடலுக்காக வாணிஸ்ரீ நடனம் படத்தின் உயிர் நாடி என்று ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அந்தப் பாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாக படத்தில் இடம்பெறும். மேலும், அந்த பாடலை ஷோபன் பாபு பாட அதன்படி வாணிஸ்ரீ அதற்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும். அதுதான் காட்சி.
ஆனால், இந்த பாடலின் வார்த்தைகள் மொத்தமும் சமஸ்கிருத வார்த்தைகளால் இருந்தது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் சம்மதிக்கவே இல்லை.
அதன் பிறகு ஸ்ரீ நாராயணா வார்த்தைகள் முழுவதையும் விரிவாக விளக்கி மகாதேவனை சமாதானப்படுத்தினார்கள் .
பெண்களின் கனமான மார்பகம்:
படப்பிடிப்பு எல்லாம் தயாராகிவிட்டது. சோபன்பாபு லிப் மூவ்மெண்ட் அல்லது பாடலை பாட வேண்டும். அந்தப் பாடலின் வரிகளை அவரிடம் கொடுத்து அவர் அதற்கு தயாராக படித்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அந்தப் பாடலின் வார்த்தைகளை படித்துக் கொண்டிருந்த சோபன்பாபு “கச்சபாரத்திற்கு” பதிலாக “குச்சபரா” என்னும் ஒரு வார்த்தையை வாசிக்கிறார்.
அதைக்கேட்ட வாணிஸ்ரீ ஷோபன் பாபு நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? என்று வாணிஸ்ரீ என்னிடம் தான் வந்து கேட்டார்.
அந்த வார்த்தை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. “குச்சபரா” என்றால் தவறான அர்த்தம் அது என்னால் சொல்ல முடியவில்லை…இது பெண்களின் கனமான மார்பகங்களை குறிக்கிறது என்றேன்.
உடனே ஷோபன் பாபு தனது தவறை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். நடிகை வாணிஸ்ரீ சிரித்துக் கொண்டே வெளியேறினார் என எழுத்தாளர் ஜெயக்குமார் பிரபல தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.