முக முடியை நீக்க மாஸ்க்

பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேற்புறமும் தாடிக்கு கீழ்ப்புறமும் மீசை வளர்வதை பார்த்திருப்போம். ஆண்களின் உடலில் முடி வளர்வதை தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும் போது தான் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்கிறது.

 இந்த பிரச்சனையால் பெண்கள் வெளியே செல்லவே கூச்சப்படுவார்கள். முடி வளர்வதை தடுக்க பார்லர்களில் செய்யப்படும் த்ரெட்னிங்   மேற்கொள்வதால் ஒற்றைத்தலைவலி ஏற்படுவதுடன் பக்க விளைவுகளும் ஏற்படும்.

இதனால் தேவையற்ற முடிகளை நீக்க சில  ஹேர் ரிமூவல் க்ரீம் உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது .

இயற்கை முறையில் முக முடியை நீக்க சில குறிப்புகள்

குறிப்பு 1

குப்பைமேனி இலை பொடி, கோரைக்கிழங்கு பொடி, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி, அடுப்புச் சாம்பல் ஆகிய அனைத்தையும் தலா 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்க வேண்டும். இதிலிருந்து அரை ஸ்பூன் எடுத்து அதில் 10 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த பேஸ்டை தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் நன்றாகத் தடவவேண்டும். நன்கு காய்ந்ததும் போதுமான அளவுக்கு அழுத்தித் தேய்க்க வேர்கள் வலுவிழந்து முடி உதிர்ந்து விடும். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் முடி உதிர்ந்து முகம் பளபளப்பாகவும் வழவழப்பாகவும் காட்சியளிக்கும்.

அடுப்புச் சாம்பல் கிடைக்காதவர்கள் தேங்காய் ஓட்டை எரித்து அதன் மூலம் கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இயற்கை முறையில் செய்யும் இந்த மாத எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மற்றொரு முறையிலும் முகத்தில் உள்ள முடிகளை நீக்கலாம்.

குறிப்பு 2

 அதற்குத் தேவையான பொருட்கள் கடலை மாவு, மஞ்சள் சிறிதளவு, எலுமிச்சம் பழ சாறு, தேங்காய் எண்ணெய் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து முகத்தில் நன்றாக பூசி கொள்ள வேண்டும்.

 அப்படி பூசிய கலவையை சுமார் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் நன்றாக அழுத்தி முகத்தை கழுவவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள முடிகள் விரைவில் உதிரும். 

குறிப்பு 3

இயற்கையாகவே பெண் குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்து மஞ்சள் தேய்த்து  குளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். 

குறிப்பு 4

பெண்களின் உதட்டிற்கு மேலே முடி அதிகமாக காணப்படும் இதனை போக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை அளவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த கலவையை முகத்தில் மட்டுமல்லாமல் உடலின் மற்ற பகுதிகளிலும் வளரும் முறையில் வளரும் முடியை போக்க இது உதவும். இந்த கலவை மிகவும் சென்சிட்டிவான பகுதிகளில் பயன்படுத்தக்கூடாது. மேற்கூறிய இந்த முறைகளை நீங்கள் பயன்படுத்திப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …