வரம்பு மீறிய தனுஷ்.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இதுவே.. பிரபலம் கூறிய பகீர் தகவல்..!

சமீப காலமாக கோலிவுட் சினிமாவின் அடுத்தடுத்த நட்சத்திர பிரபல ஜோடிகளின் விவாகரத்து விவகாரம் அரங்கேறி வருகிறது .

முன்னதாக தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து என அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடுத்தடுத்த விவாகரத்து:

தமிழ் சினிமா பிரபலங்களின் வாழ்க்கை எதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது? என்ற கேள்வி எழும் வகையில் அடுத்தடுத்த நட்சத்திரங்களின் விவாகரத்துகள் அமைந்து விட்டது.

அந்த வகையில் தற்போது அடுத்த லிஸ்டில் இருப்பவர்கள்தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமீப நாட்களாக செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு பேரதிர்ச்சியை கிளம்பி இருக்கிறது.

ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் விஷயம் ஏதேனும் இருந்தால் தானே இது போன்ற செய்திகள் எல்லாம் கடைத்தெருவுக்கு வரும்.

ஒன்றுமே இல்லாமல் இது போன்ற செய்திகள் வெளியாக வாய்ப்பில்லையே. எனவே இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

நிச்சயம் விவாகரத்தை நோக்கி சில நாட்களில் சென்று விடுவார்கள். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவந்து விடலாம் என ரசிகர்கள் ஆளாளுக்கு தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து?

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான ஜெயம் ரவி நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாயாக காதல் திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளின் வட்டத்தையும் கவர்ந்தார்.

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த ஜெயம்,மழை, சம்திங் சம்திங் , சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், எங்கேயும் காதல்,ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட காதல் திரைப்படங்களில் சாக்லேட் பாயாக ரசிகர்களை கவர்ந்தார்.

அதையடுத்து அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனி ஒருவன், நிமிர்ந்து நில், பூலோகம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆக்சன் திரைப்படங்களாக வெளிவந்திருந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

இவர் பிரபல தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

எல்லாத்துக்கும் காரணம் தனுஷ்?

இப்படியான சமயத்தில் தான் இவர்களின் விவாகரத்து விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் என்று கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த பிரபலங்களின் விவாகரத்துக்கு தனுஷே காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்துக்கும் தனுஷ் என கூறப்படுவது பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இவர்களின் இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் சபிதா ஜோசப்…நிச்சயம் இவர்களுக்குள் ஏதோ ஒரு EGO பிரச்சனை வந்திருக்கிறது .

அதனால் தான் இந்த விவாகரத்து செய்தியாக வெளியாகிவிட்டது. இதிலும் தனுஷை சம்மந்தப்படுத்தி பேசுவது சரி இல்லை.

உண்மையில் இது தான் நடந்துச்சு:

இதற்கும் தனுஷுக்கும் சம்பந்தமே இல்லை. தனுஷ் நைட் பார்ட்டிகளில் எல்லை மீறி சிலரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதெல்லாம் உண்மைதான்.

ஆனால் அது பொதுவெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிடும். அப்படித்தான் இவர்களின் இந்த விவகாரத்திலும் தனுஷ் சம்பந்தப்பட்டிருக்கிறார் என பொய்யாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

எனவே தனுஷ்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க கணவன் மனைவிக்கு ஏற்பட்ட ஈகோ தான் என தகவல்கள் தெரிவிக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே உண்மையில் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை என தெரிய வந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam