தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளி வர இருக்கும் GOAT திரைப்படத்திலிருந்து வெளி வந்த சின்ன, சின்ன கண்கள் பாடல் காப்பி ரைட் பிரச்சினையில் சிக்கி உள்ளதா?
லியோ திரைப்படத்தில் தளபதி நடித்ததை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படமும் தளபதி 69 படம் மட்டுமே நடிக்க இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளி வந்து மொக்கையாக பேசப்பட்டது.
காப்பிரைட் பிரச்சனையா..
இந்நிலையில் விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் சின்ன, சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
மேலும் இந்த பாடல் ஆனது தற்போது காபி ரைட்ஸ் பிரச்சனையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது. அத்தோடு இந்தப் பாடல் ஆனது 22-ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் வெளி வந்தது. இந்த பாடலின் பாடல் வரிகளை கபிலன் எழுதி இருக்கிறார்.
விஜய் மற்றும் சினேகா நடிப்பில் அழகான மெலோடி ஆக வெளி வந்துள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவின் தங்கை பவதாரணியும், நடிகர் விஜயும் பாடியிருக்கிறார்கள்.
அட.. இறந்து போன பவதாரணி எப்படி பாடியிருப்பார் என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)டெக்னாலஜியின் மூலம் பவதாரணையின் குரல் பாடலாக வெளி வந்துள்ளது.
நீக்கப்பட்ட கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல்..
இந்நிலையில் இந்த பாடலை வெளியிடுவதற்கு முன்பே இந்த பாடலானது இணையத்தில் வெளியாகி படகுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் அந்த சமயத்தில் பட குழு தெரிவிக்காமல் இருந்தது.
இதனை அடுத்து தற்போது இந்த பட குழு அதிரடியான முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் அதிர்ந்து போவீர்கள். அந்த அளவு இறங்கி வேலை செய்து இருக்கிறார்கள்.
காரணம் அறிந்தால் சிரிப்பீர்கள்..
அது என்ன வேலை என்றால் கோட் படத்தின் சின்ன, சின்ன கண்கள் பாடல் தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சோசியல் மீடியாவில் உள்ள அனைத்து கணக்குகளுக்கும் காப்பி ரைட்ஸ் நோட்டீசை அனுப்பி வைத்து அதிரடியாக மிரட்டி இருக்கிறார்கள்.
மேலும் சோசியல் மீடியாவில் இது போல பாடல்கள் பரவினால் அந்தப் பாடலின் ரீச் குறைந்து விடும் என்பதால் இது போன்ற அதிரடி நடவடிக்கையில் பட குழு இறங்கி உள்ளது.
இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருவதால் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.