முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு விவாகரத்து வழக்கு என்பது வரும். அது மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு கொண்டிருக்கும். இப்பொழுது எல்லாம் வாரத்துக்கு ஒரு விவாகரத்து நடந்து வருகிறது.
தமிழ் சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யும்பொழுதே இவர்கள் எப்பொழுது விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஒரு தற்காலிகமான உறவு முறையை பின்பற்றி வருகின்றனர் சினிமா பிரபலங்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து தற்சமயம் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ஒல்லி நடிகர், இசையமைப்பாளர் என்று சினிமாவில் பிரபலமாக இருந்த முக்கியமான ஆட்கள் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
விவாகரத்து பிரச்சனைகள்:
அதனை தொடர்ந்து ஏன் இப்படி தொடர்ந்து எல்லாம் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று அப்போதே மக்கள் அதற்காக எதிர்மறையாக பேசி வந்தனர். இந்த நிலையில் முக்கியமான சக்சஸ் நடிகரும் தனது மனைவியை பிரிய தயாராக இருப்பது மேலும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும் பல வருடங்கள் நன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விவாகரத்து செய்யப் போவது கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருக்கிறது விவாகரத்துக்காக முதலில் நீதிமன்றத்தை நாடியது இந்த சக்சஸ் நடிகர்தான் என்று கூறப்படுகிறது.
ஆனால் மனைவியைப் பொறுத்தவரை தனது கணவனை பிரிவதில் அவருக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் நடிகையின் ஆசையாக இருக்கிறதாம். ஆனால் நடிகரோ இனி அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.
பிரபல கதாநாயகன் செய்த வேலை:
அதற்கு காரணம் ஒரு பிரபல கதாநாயகன்தான் என்று கூறப்படுகிறது ஏற்கனவே சில விவாகரத்துக்கு காரணமாக இருந்தவர் இந்த நடிகர். சக்சஸ் நடிகரின் மனைவி கொஞ்சம் மாடர்ன் கலாச்சாரம் பக்கம் போய் பார்ட்டி டூர் என்று ஜாலியாக இருந்திருக்கிறார்.
அப்போது அவருடன் டாப் இயக்குனரின் மனைவி மற்றும் சில ஹீரோயின்களும் கூட கம்பெனி கொடுத்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் பெண்கள் இருந்தவரை எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் ஒரு பார்ட்டியில் சக்சஸ் நடிகரின் மனைவி பிரபல ஹீரோவை சந்தித்து மணி கணக்கில் பேசியிருக்கிறார்.
அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாகி நடிகரின் மனைவி வெளிநாட்டுக்கு சென்றபோது கூடவே இந்த ஹீரோவும் சேர்ந்து போயிருக்கிறார். இதுதான் இந்த சக்சஸ் ஹீரோ தனது மனைவியை விட்டு பிரிவதற்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த விவாகரத்தும் அதே பிரபல நடிகர்களால் தான் ஏற்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிய துவங்கியிருக்கிறது.