தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளும் முதல் படத்திலேயே பெரிதாக மார்க்கெட்டை பெற்று விடுவது கிடையாது. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு நிறைய திரைப்படங்களில் அவர்கள் நடிக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் முதல் திரைப்படமே கை கொடுத்துவிடும். அப்படி முதல் திரைப்படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ திவ்யா. 2013ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீ திவ்யா.
எஸ்.கே படத்தில் அறிமுகம்:
அதற்கு முன்பே தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும் தமிழில் முதன்முதலாக அவர் நடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் தமிழில் வந்தது. மேலும் முதல் திரைப்படத்திலேயே சீமா சிறந்த நடிகைகளுக்கான விருதை பெற்றார் ஸ்ரீ திவ்யா. தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரதுறை, காக்கி சட்டை என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி திரைப்படங்களாகவே இருந்தன.
பொதுவாக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் என்பது வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஸ்ரீ திவ்யா விஷயத்தில் அதில் மாற்றமாக இருந்தது. பென்சில், மருது, ஈட்டி மாதிரியான வெற்றி படங்களில் தேர்ந்தெடுத்து நடித்தும் கூட 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்புகள் குறைய துவங்கின.
குடியால் வந்த வினை:
அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் அதிகமாக நடிக்கவே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது அவருக்கு இருந்த தவறான சகவாசங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தவறான நட்பின் மூலமாக மது அருந்தும் பழக்கத்திற்கு உள்ளானார் ஸ்ரீ திவ்யா.
ஒரு கட்டத்திற்கு மேல் மதுவுக்கு அடிமையான ஸ்ரீ திவ்யா தொடர்ந்து க்ளப்புகளுக்கு செல்வதும் மது அருந்துவதுமாக இருந்திருக்கிறார். இதனால் படப்பிடிப்புகளில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்த விஷயங்களை அறிந்த தயாரிப்பாளர்கள் ஸ்ரீ திவ்யாவை படத்தில் கமிட் செய்தால் அது ரிஸ்க் என்று நினைத்த காரணத்தினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பதை நிறுத்தினர்.
இதனால் ஒட்டுமொத்தமாக வாய்ப்புகளை இழந்த ஸ்ரீ திவ்யா தற்சமயம் மீண்டும் மதுபழக்கத்திலிருந்து வெளிவந்து வாய்ப்புகளை தேட துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.