சினிமாவை பொருத்தவரை பாலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் மீசைகளே வைத்திருப்பதில்லை. ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எல்லாம் மீசை வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது ரசிகர்கள் பலருக்குமே பல நாளாக இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது.
ஆனால் இந்த மீசை வைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது இந்தியர்கள் காலம் காலமாகவே மீசை வைப்பது மற்றும் தாடி வளர்ப்பது என்பதை ஒரு கலாச்சார விஷயமாக பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த போது அவர்களுக்கு மீசை என்பதே இல்லை.
மீசை இல்லா வெள்ளையர்கள்:
மீசை என்பது இந்தியாவில் ஆண்களின் அடையாளமாக பார்க்கப்பட்ட காரணத்தினால் அரசர்கள் பலருமே ஆங்கிலேயர்களை மதிக்காமல் இருந்து வந்தனர். முக்கியமாக அரசர் திப்புசுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை போரிட்டு இருக்கிறார்.
அவர் வரைந்த படங்களில் எல்லாம் ஆங்கிலேயர்களை மீசையில்லாமல் பெண் போல படம் வரைந்து இருந்தார். இது ஆங்கிலேயர்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அதனை அடுத்து ஆங்கிலேயர்களும் மீசை வளர்க்க துவங்கினர். ஆங்கிலேயர்கள் வளர்க்கும் இந்த மீசைக்கு இங்கிலீஷ் மீசை என்றே பெயர் உண்டு.
இந்த நிலையில் ராணுவத்தில் சேர வேண்டும் என்றால் கண்டிப்பாக மீசை இருக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு இந்த மீசை பிரச்சனை அதிகரித்தது. பிறகு வரலாற்றில் மோசமானவர்களாக இருந்த பலரும் மீசை வைத்தவர்களாக இருந்ததாலும் ராணுவ வீரர்கள் சிலருக்கு அதுபிரச்சனையை கொடுத்ததாலும் பிறகு ராணுவத்தில் சேர்வதற்கு மீசை முக்கியமானது என்னும் விதிமுறையை நீக்கினார்கள்.
அந்நிய கலாச்சாரம்:
இந்த நிலையில் இதற்கும் பாலிவுட் நடிகர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் மேற்கத்திய நாகரிகம் என்று ஆங்கிலேயர்கள் அழைக்கும் நாகரிகங்கள் எல்லாம் முதலில் வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் மட்டும் தான் பிரபலமாகும்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை தென்னிந்திய மக்கள் தங்களுக்கு பிடித்த விதத்தில் தான் வாழ்வார்கள். தங்களது கலாச்சாரத்தை அவர்கள் போற்றுவார்கள் என்பதால் இந்த மீசையை நீக்கிக் கொள்ளும் நடைமுறையானது வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பிரபலமாக இருந்தது.
ஆனால் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் மீசை தாடியுடனே இருந்தனர். ஆனால் இப்பொழுது பாலிவுட்டிலும் எல்லாம் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. மீசை தாடியுடன் இருக்கும் நடிகர்கள் வசீகரமாக இருப்பதால் தென்னிந்திய நடிகர்களை பார்த்து வட இந்திய நடிகர்களும் மீசை தாடி வளர்க்க துவங்கியிருக்கின்றனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் கூட மீசை தாடியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது எனவே தமிழக கலாச்சாரம் இப்பொழுது இந்திய கலாச்சாரமாக மாற துவங்கியிருக்கிறது.