தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விவாகரத்து ஜிவி பிரகாஷின் விவாகரத்தாக இருந்து வருகிறது. தமிழில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மற்ற பிரபலங்களை போல அரேஞ்ச் மேரேஜ் முறையில் திருமணம் செய்தவர் அல்ல ஜி வி பிரகாஷ் அதேபோல குறைந்த காலங்கள் மட்டும் காதலித்து விட்டு திருமணம் செய்தவரும் அல்ல.
விவாகரத்து பிரச்சனைகள்:
சிறு வயது முதலே அவரும் அவரது மனைவி சைந்தவையும் நண்பர்களாக இருந்து வந்தனர். பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பின் ஆழத்தின் காரணமாகவே காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்படி திருமணம் செய்து கொண்டவர்களே பிரியும் நிலை வரும்பொழுது அது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதேபோல சினிமா பிரபலங்களால் சில நடிகர்கள் சில இசையமைப்பாளர்கள் விவாகரத்தை கண்டிருக்கின்றனர். அப்படி கண்ட இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் இமான். சிவகார்த்திகேயனுக்கு நிறைய வெற்றி பாடல்களை கொடுத்த இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இனி அவருக்கு ஒரு படத்தில் கூட இசையமைக்க மாட்டேன் என்றும் பட்ட வர்த்தமாக கூறியிருந்தார் இமான். இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றது என்று கூறலாம். ஆனால் இந்த பேட்டிக்கு பிறகு இமானுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இமானுக்கு வந்த பிரச்சனை:
இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் விஷயம் இருக்கிறதா என்பது அனைவருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இருந்தாலும் வாய்ப்புகள் குறைந்தாலும் கூட பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் மேலும் சந்தானம் நடிக்கும் இங்கு நாந்தான் கிங்கு. அடுத்து ஜெய் மற்றும் யோகி பாபு நடிக்கும் திரைப்படத்தில் இசை அமைக்க இருக்கிறார்.
எனவே இமானின் மார்க்கெட் என்பது அதற்கு பிறகு கூட சினிமா துறையில் பெரிதாகவே இருந்தது. இந்த நிலையில் ஜெய் நடிக்கும் பேபி அண்ட் பேபி என்கிற அந்த திரைப்படத்தில் தாலாட்டு பாடலை சைந்தவி பாடி இருக்கிறார் பல வருடங்கள் கூட்டணி வைத்து பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷிடம் விவாகரத்து கேட்ட நிலையில் தற்சமயம் சைந்தவி இமானை பாராட்டியிருப்பது பலருக்கும் நெருடலாக இருக்கிறது.