மனதினை கொள்ளை அடிக்கும் உலகக் கோப்பை.

கிரிக்கெட் என்றாலே அனைவரும் ஒன்றாக அமர்ந்து மிக ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு ஓர் அருமையான விளையாட்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் என்றால் வீட்டுக்குள்ளேயே பெட் கட்டி யார் வெல்வார்கள் யார் தோல்வி அடைவார்கள் என்று நம் வீடடுக்குள்ளேயே ஒரு போட்டியை உருவாக்கி மிக ஜாலியாக பார்க்கக்கூடிய இந்த கிரிக்கெட் உலகக் கோப்பை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் எவ்வளவு உலகக்கோப்பை இதுவரை நடந்துள்ளது அதில் யார் யார் வென்று உள்ளார்கள் என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

1975ஆம் ஆண்டு தான் முதல் உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் துவங்கப்பட்டது. இதில் ஸ்கெட்ச் போட்டிகளில் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸ் இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்து நாடுகள் போட்டிகளில் பங்கேற்றது அதுமட்டுமல்லாமல் புதிதாக ஸ்ரீலங்காவும் கிழக்கு ஆப்பிரிக்க நாடு போட்டியில் பங்கு கொண்டது. இதுவரை சுமார் 12 உலக கோப்பை போட்டிகள் 1975 முதல் 2019 வரை  நடந்துள்ளது.

 முதலில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவானது ஏ பிரிவு அணிகளுடன் விளையாடியது. அதிகபட்சமாக உலகக் கோப்பையை ஐந்து முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அவை முறையே 1987 ஆம் ஆண்டு மற்றும் 1999, 2003, 2007, 2015 ஆம் ஆண்டுகளில் தங்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் உலகக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது ஆஸ்திரேலியா. 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டியன்ஸ் தொடர்ந்து 2 முறை தக்கவைத்துக் கொண்டது.

அதற்கடுத்த ஆண்டு கபில்தேவ் தலைமையில் 1983ல் ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011-ம் ஆண்டு இந்தியா இருமுறை உலகக் கோப்பையை வென்றது. முதல் உலகப் போட்டியில் மொஹிந்தர்  அமர்நாத் 7 ஓவர்கள் பந்துவீசி வெறும் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் மகேந்திர சிங் தோனி 79 பந்துகளில் 91 ரன் எடுத்து ஆட்டம் சன் விருதைப் பெற்றார்.

 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஒருமுறையும் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவும் ஆயிரத்து 19 ஆம் ஆண்டு இங்கிலாந்து தலா ஒரு முறை உலகக்கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இரண்டு முறை உலக கோப்பை யை வெற்ற நம்மால் இனி அடுத்த உலக கோப்பையை வெல்ல முடியுமா? நிச்சயமாக முடியும் எனும் நம்பிக்கையோடு  நாம் காத்திருப்போம் களத்தில் வெற்றி கொள்வோம்.

               

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …