5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை.. பிக்பாஸ் மாயாவின் கருப்பு பக்கங்கள்..! உடைத்த சினிமா பிரபலம்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தால் கூட சிலருக்கு  அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காது. ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அதைவிட அதிகமான அளவில் பிரபலமாகிவிடுவார்கள்.

அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரும் அதில் வெற்றியடைகிறார்களோ இல்லையோ மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விடுவார்கள்.

இதற்காகவே சிலர் அதிக ஆக்டிவாக பல வேலைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து வருவதுண்டு. சினிமாவில் சில காலங்கள் இருந்த பிறகும் அதில் கிடைக்காத வரவேற்பை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெற்றவர்தான் நடிகை மாயா.

மாயாவிற்கு வந்த வாய்ப்பு:

இவர் விக்ரம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்பிருந்தே திரைத்துறையில் பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார். இவருக்கு பிக் பாஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸில் கலந்து கொண்ட போது முதல் வாரம் மாயா பெரிதாக எதுவுமே செய்யவில்லை. சொல்லப்போனால் மாயா என்று ஒருவர் இருப்பதே தெரியவில்லை என்கிற அளவிற்குதான் அவரது நடவடிக்கை இருந்தது. ஆனால் போகப் போக அவருக்கென்று ஒரு குழுவை உருவாகிக் கொண்டு மக்கள் மத்தியில் அவரது பெயர் பதியும் அளவிற்கு நிறைய பிரச்சனைகளை செய்ய துவங்கினார்.

முக்கியமாக போன முறை டைட்டில் வின்னரான அர்ச்சனா பிக் பாஸில் டைட்டில் ஜெயிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாயாதான். ஏனெனில் அர்ச்சனா வீட்டிற்குள் வந்த உடனே அவரை தொடர்ந்து மனம் நோகும்படி செய்து அவரை அழ வைத்தார்.

மாயா குறித்து சுசித்திரா:

அந்த ஒரு சிம்பதி மக்கள் மத்தியில் பயங்கரமாக ஒர்க் அவுட்டாக தொடங்கியது. தனித்திருக்கும் அர்ச்சனாவை மாயா ஒரு கும்பலாக சேர்ந்து கிண்டல் செய்தது பெருவாரியான மக்களுக்கு அர்ச்சனா மீது கருணையை உருவாக்கியது.

அதனை தொடர்ந்துதான் போன பிக் பாஸ் சீசனில் அர்ச்சனா ஜெயித்தார் அதன் மூலம் மாயாவும் பெரிய மார்க்கெட்டை பிடித்தார். தற்சமயம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் மாயா.

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் மாயாவிற்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல லியோ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் கமல் பேசுவது போன்ற காட்சி ஒன்று வரும் அதிலும் மாயா இருப்பதை பார்க்க முடிந்தது.

மாயா குறித்து சமீபத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிடும் பாடகி சுசித்ரா சில ரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறும்போது யாரோடு பழகினாலும் அவர்கள் மீது தன்னுடைய முழு அதிகாரத்தை செலுத்த நினைப்பவர் மாயா. மேலும் பழகும் நபர்களிடம் ஐந்து முதல் 50,000 வரை எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கக் கூடியவர் அவர் சரியான பணப்பேய் என்று கூறியிருக்கிறார் சுசித்ரா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam