கட்டிய புருஷனால் பல வழக்கில் சிக்கிய சிங்கம் பட நடிகை யுவராணி..! பலரும் அறியாத பகீர் தகவல்கள்..!

1990-களில் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக விளங்கிய யுவராணி  செந்தூரப்பாண்டி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இந்த படம் வெளி வருவதற்கு தாமதம் ஆனதை அடுத்து கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் 1991 தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நடிகை யுவராணி..

இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ ராஜ்குமார் இயக்கிய புது வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கக்கூடிய இவர் 1993 – இல் ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் குஷ்பூ மற்றும் வினித்தோடு இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் அதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கிய கோயில் காளை படத்தில் உஷா என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை யுவராணி சுதா என்ற கேரக்டர் ரோலை மாபியா என்ற மலையாள திரைப்படத்தில் செய்து மலையாள மொழிக்கும் அறிமுகமானார்.

அத்துடன் தளபதி விஜய் உடன் இணைந்து செந்தூரப் பாண்டியில் ஜோடியாக நடித்த இவர் அடுத்தடுத்து விஜய் நடிப்பில் வெளி வந்த படங்களில் படு நெருக்கமாக நடித்து கிசுகிசுக்கள் ஏற்பட காரணமாக மாறினார்.

இவர்கள் இருவருக்கும் இருந்தது நட்பு ரீதியிலான உறவு என்பதை ஒவ்வொரு முறையும் ப்ரூப் செய்வது போல நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இவர் வாழ்த்து சொல்லுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது போல நடிகர் விதையும் யுவராணியின் பிறந்தநாள் சமயத்தில் வாழ்த்துக்களை சொல்லுவார் என்று சொல்லி இருக்கிறார்.

கட்டிய புருஷனால் பல வழக்கில் சிக்கிய யுவராணி..

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன மேடம், நிலா, பசும்பொன், செல்லக்கண்ணு போன்ற படங்கள் திரையுலகம் உள்ள வரை இவர் பெயரை சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அசாத்தியமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் காதல் பகடை, சித்தி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சித்தி தொடரில் இவர் வில்லியாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து சினிமா வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வெளிநாட்டைச் சேர்ந்த ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் வெளிநாட்டில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.

அத்துடன் இவர் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் சட்டத்துக்கு புறம்பான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பல பெண்களை கட்டாயப்படுத்தி செய்ததை அடுத்து அந்த பெண்கள் இவர் மீது வழக்கு தொடர்ந்ததாக தெரிய வந்துள்ளது.

பலரும் அறியாத பகீர் தகவல்கள்..

இதனை அடுத்து கணவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த யுவராணி யாரெல்லாம் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்களோ அவர்கள் மீது தனது கணவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க கூடிய வகையில் பதில் வழக்கு பதிவு செய்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து 2003-இல் சிவில் கேஸ் ஒன்றை யுவராணி பதிவு செய்திருக்கிறார். இவர் மீது வழக்கு தொடர்ந்த செய்தி நிறுவனம் இவர் பதில் வழக்கை பதிவு செய்ததை அடுத்து அந்த செய்திகளை டெலிட் செய்து விட்டார்கள்.

இதனை அடுத்து யுவராணி தற்போது சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் தடை காட்டாமல் ஃபேமிலியில் செட்டிலாகி விட்டார். இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது என்று சொல்லலாம்.

மேலும் யுவராணி பற்றிய இந்த வழக்கு விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி இணையங்களில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam