தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது இந்த பந்தம் நீடித்து நிலைத்து நிற்காமல் விவாகரத்தில் முடிந்தது.
காதலை உணர்ந்த சீதா கிட்ட..
நடிகை சீதா திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். திருமணத்திற்கு பின்னால் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் புதிய பாதை படத்தில் நடித்ததை அடுத்து இயக்குனர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பிரிந்த இவர்களது பிரிவு குறித்து பல்வேறு விஷயங்கள் வெளி வந்த போதிலும் நடிகர் பார்த்திபன் அண்மையில் தனது விவாகரத்து குறித்து ஓப்பனாக பேசியது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகிறது.
மேலும் நடிகர் பார்த்திபன் சீதா கிட்டே தான் தன்னுடைய காதலை உணர்ந்ததாக பேசியது வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் அவரை விவாகரத்து செய்ய வேண்டாம் என ஆரம்ப நிலையில் நினைத்ததாகவும் அப்படியே காலத்தை தள்ளி விட வேண்டும் என்று கருதியதாகவும் சொன்ன விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் தான் ஒரு சாதாரண நிலையில் இருந்த போது தன்னுடைய காதலை முற்றிலும் உணர்ந்தது சீதாவிடம் இருந்து மட்டும் தான் என்று உணர்ச்சி பொங்க தனது பாணியில் பேசி பேசும் போது ஆரம்ப நாட்களில் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது மிகப்பெரிய ஸ்டார் ஆக வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் என சொன்னார்.
டைவர்ஸ் கேட்டப்போ..
தற்போது அனைவரும் எளிதாக டைவர்ஸ் செய்து வருகிறார்கள். ஆனால் அன்று நான் அதை செய்ய பல முறை யோசித்ததோடு மட்டுமல்லாமல் அதுவே வேண்டாம் அப்படியே சமாளிப்போம் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்து கொண்டேன்.
ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கின்ற டைவோஸ் சாதாரணமானது, எதார்த்தமானது. அதுவே அம்மா அப்பா ஆகிவிட்ட நிலையில் அதனை சற்று யோசிக்க வேண்டும் என்று உருக்கத்தோடு அனைவரையும் யோசிக்க வைத்தார் பார்த்திபன்.
மேலும் தற்போது திரையுலகில் நட்சத்திர தம்பதிகளிடையே அதிகரித்திருக்கும் விவாகரத்து பார்த்திபன் பார்வையில் எப்படி உள்ளது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
நடிகர் பார்த்திபன் கூறிய பகீர்..
இதனை அடுத்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன் தான் அதைப் பார்ப்பது இல்லை. இது இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மிகத் தெளிவாகவும் ரத்தின சுருக்கமாகவும் கூறி இருக்கிறார்.
காதல் என்பது எதுவரை கல்யாணம் ஆகும் வரை என்ற பாடல் வரிகளை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது தான் எதார்த்தமான உண்மை என்பதை புட்டு, புட்டு வைத்தார்.
மேலும் டைவர்ஸ் பற்றி பேசும் போது மனது ஓட்டவில்லை என்றால் உடனே பிரிந்து விடுவது தான் நல்லது என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இது கலாச்சாரம் சார்ந்த விஷயமல்ல ஒரு மனிதனின் மனநிலையைச் சார்ந்த விஷயம் என்பதையும் சொல்லி இருக்கிறார்.
தற்போது இந்த பேசாததை இணையத்தில் வைரலாக வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.