கிரிக்கெட்டில இன்னிக்கு வரைக்கும் இவரு மட்டும் தான் தாதா.

பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என பல வார்த்தைகளால் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை இன்று வரை தங்களின் ஸ்டார் ஆகவே நினைத்து வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவரின் அசாத்தியத் திறமை மட்டும்தான். உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் நான் தற்போது செளரவ் சந்திதாஸ் கங்குலி பற்றி தான்  கூறுகிறேன் என்று. இவர் ஜூலை எட்டாம் தேதி 1972-ல் பிறந்தார். இடது கை பேட்ஸ்மேன் ஆனால் இவர் இந்தியாவிற்காக மேட்சுகளில் தன்னுடைய திறமையை நிரூபித்து ஒரு சிறந்த கேப்டனாக இருந்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் 131 அதை தனது முதல் ஆட்டத்திலேயே அடித்து தன்னுடைய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் தான் சௌரவ். அது மட்டுமல்லாது வெளிநாடுகளில் விளையாடக்கூடிய விளையாட்டில் அதிக பட்ச பார்ட்னர்ஷிப் 255 ரன்கள் என சச்சினுடன் சேர்ந்து  அதே தொடரில் தனது பலத்தை நிரூபித்தார்.

 அதுமட்டுமல்ல 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் கங்குலி  அடித்த பந்துகள்  இரண்டு முறை ஸ்டேடியத்திற்கு வெளியே போய் விழுந்தன இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத நினைவுகள் ஆகத்தான் இருக்கும். சூர்யா சொன்னது போல் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டு என்பது இவர் விட்டு விளாசிய பந்துகளை கேட்டால்  தெரியும் அந்தப் பெங்கால் சிங்கத்தின் வலிமை என்னவென்று. இருபத்தியோரு உலகக் கோப்பை போட்டிகளை சந்தித்தவர். சுமார் 1006 ரன்களை குவித்தவர். 4 சதங்களை அடித்து உலக கோப்பையில் அதிக ரன்கள்(183) எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை இவரையே சாரும். மும்பை சச்சினின் கோட்டை எனவும் கொல்கத்தா கங்குலியின் கோட்டை என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களின் பெயர்களை இன்னும் உச்சரித்த வண்ணமே உள்ளார்கள்.

 தற்போது அவர் இந்திய இந்திய பிரீமியர் லீக்  போட்டிகளை நடத்தும் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராகவும் இதன் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.  இவரின் பந்துவீச்சு, பங்கினை அடிக்கும் பாங்கு, தலைமைப் பொறுப்பின் நேர்த்தி யாரும் அறிந்ததுதான். இன்றுள்ள இளைய வீரர்கள் இவரின் திறன்களை  கற்றறிந்து தங்களின் பங்கிற்கு அவர்களின் பந்துவீச்சிலும் பந்தை அடிப்பதிலும் மிக நேர்த்தியாக காட்டி வருகிறார்கள். இந்த உலகம் இருக்கும் வரை பெங்கால் டைகர் இன் பாய்ச்சலை பற்றி உலகம் நிச்சயம் பேசும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …