தமிழ் சினிமாவில் 80களில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். திருச்சியில் பிறந்த நெப்போலியன் நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர். பிரபல திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தக்காரர்தான் நெப்போலியன்.
ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் துணை கதாப்பாத்திரங்களை ஏற்ற நெப்போலியன் 1991ல் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிட் படங்கள்:
அதன்பிறகு சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், எஜமான் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.அரசியலிலும் இறங்கிய நெப்போலியன் திமுக சார்பாக மயிலாப்பூரில் நின்று வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.
சமீபத்தில் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன் அவ்வபோது இந்தியா வந்து செல்கிறார். நெப்போலியனுக்கு தனுஷ் என்ற மகன் ஒருவர் உள்ளார்.தனுஷிற்கு சிறுவயதில் இருந்தே தசை பிறழ்வு நோய் இருந்து வருகிறது. தனது மகனுக்காகதான் நெப்போலியன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.
இந்த நோய் காரணமாக தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது. இந்நிலையில்தான் தனுஷிற்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செய்ய நெப்போலியன் முடிவு செய்துள்ளார். இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விவேகானந்தர் என்பவரது மகள் அக்ஷயாவை பேசி முடித்திருக்கிறார்கள்.
மகனுக்கு நிச்சயம்:
சமீபத்தில் நிச்சயதார்த்ததிற்காக நெப்போலியனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் அக்ஷயாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். தனுஷால் இந்தியா வர முடியாது என்பதால் வீடியோ கால் வழியாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் எப்படி? எங்கே? நடக்கப்போகிறது என்பதுதான் பலருக்கும் கேள்வியாக உள்ளது. தனுஷை தமிழ்நாடு அழைத்து வந்து திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவரை கப்பல் மூலமாக மட்டும்தான் அழைத்து வர முடியும்.
ஆனால் அப்படி அழைத்து வர 6 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பெண் வீட்டார், சொந்தக்காரர்களை நெப்போலியன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்று திருமணத்தை நடத்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே நெப்போலியன் சொகுசு கப்பல் ஒன்றை மகனை அழைத்து வருவதற்காக புக் செய்துள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.