எறால் ரைஸ்.

அசைவ உணவுகளில் எறாலுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. இதனை சுவைக்க அசைவ பிரியர்கள்அனைவரும் விரும்புவார்கள். அப்படிப்பட்ட எறால் மூலம் எறால் ரைஸ் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

எறால் ரைஸ்  செய்ய தேவையான பொருட்கள்

எறால் கால் கிலோ 

சாதம் 2 கப் உதிர் உதிராக இருக்க வேண்டும். 

பெரிய வெங்காயம் 2 

தக்காளி 1

 பச்சைமிளகாய் 1 

மிளகாய்த் தூள் 2 ஸ்பூன்

 மஞ்சள் தூள் சிறிதளவு எலுமிச்சம்பழம் சாறு ஒரு ஸ்பூன் பூண்டு 5 பல் 

சோம்பு ஒரு ஸ்பூன் 

நெய் ஒரு ஸ்பூன்

 உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் எறாவை சுத்தம் செய்யவும்.பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.அதன் பின்  பூண்டைத் தட்டி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பினை போட்டு தாளித்து பின்னர் கறிவேப்பிலையை போட்ட பின் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி நன்கு வதக்க வேண்டும்.

எறாவை  மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு போட்டு பிரட்டி  வைத்த பிறகு வதங்கி வைத்திருக்கும் பொருட்களுடன்  சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

எறா வெந்து தண்ணீர் வற்றியவுடன் எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து அதனுடன் சாதத்தை போட்டு நன்கு கிளறவும் அவ்வாறு கிளறும் போது அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ளவும் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி கிளறி இறக்கி வைக்கவும் இப்போது அனைவரும் விரும்பக்கூடிய சுவையான எறா ரைஸ் ரெடி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …