தமிழ் திரை உலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகரான தளபதி விஜய், வாரிசு நடிகராக இருக்கிறார். இவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரை உலகில் இயக்குனராக வலம் வந்தவர்.
இதனை அடுத்து தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின் முழு நேர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.
தளபதி விஜய்..
தற்போது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகி அரசியலில் குதிக்க இருக்கிறார்.
இதனை அடுத்து தனது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி மும்மரமாக நடந்து வருகின்ற வேளையில் இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பணியாற்ற வருகிறார்.
மேலும் பல மக்களும் வா தலைவா வா உன்னால் ஏதாவது மாற்றம் எங்களுக்கு ஏற்படுமா? என்பது போன்ற எண்ணத்தோடு அரசியலில் தளபதி சாதிப்பாரா? அல்லது சோடை போவாரா? என பல்வேறு வகையான சந்தேகங்களை சுமந்த படி காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த பதிவில் நடிகர் விஜயின் பூர்வீக ஊர் எது என்பது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் படித்து தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் பல சொன்னது போல விஜயின் பூர்வீகம் ராமநாதபுர மாவட்டத்தை ஒட்டி இருக்கும் பகுதியைச் சார்ந்தது.
விஜயின் பூர்வீக ஊர் மற்றும் வீடு..
எனினும் பல ஊடகங்கள் பல்வேறு விவரங்களை உங்களுக்கு தந்திருக்கலாம். ஆனால் உண்மையில் விஜயின் பூர்வீக ஊர் எது என்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில் விஜய்யின் பூர்வீக ஊர் ராமநாதபுரத்தில் இருக்கும் தங்கச்சி மடம் என பலரும் நினைத்து கொண்டு இருப்பீர்கள்.
ஆனால் அது உண்மையல்ல. விஜயின் அப்பா தங்கசி மடத்தில் இருக்கும் தனது நண்பர் வீட்டில் வந்து இரண்டு நாள் தங்கி இருந்து சென்று இருக்கிறார். அவரை சந்தித்த போது விஜயின் உண்மையான பூர்வீக ஊர் என்ன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
மேலும் அந்த ஊரில் விஜய்யின் பூர்வீக வீடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் தாத்தாவின் கல்லறையும் உள்ளது என்பது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொண்டோம். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
அந்த வகையில் ராமநாதபுரத்தில் இருக்கும் பெரியப்பட்டணம் என்ற ஊரில் முத்துப்பேட்டை என்ற ஊர் தான் அவர்களது பூர்வீக ஊராகும். தங்கச்சி மடத்தில் எஸ்ஏ சந்திரசேகரின் அப்பா ரயில்வே துறையில் பணிபுரிந்து இருக்கிறார்.
சுவாரஸ்யமான தகவல்கள்..
இந்நிலையில் தளபதி வெறியர்களாக இருக்கக்கூடிய ரசிகர்களுக்கே அவரது பூர்வீக ஊர் எது என்று தெரியாது. மேலும் முத்துப்பேட்டை தான் அவர்களின் பூர்வீகம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பலரும் அவரது பூர்வீகம் ராமநாதபுரம் என்று சொன்னாலும் அங்கு எந்த ஊர் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்க மாட்டார்கள். இந்த ஊரில் தான் இவரது பூர்வீக வீடு உள்ளது. முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் இவர்களது பூர்வீக வீடு உள்ளது.
இந்த வீட்டிலிருந்து சில மைல் தொலைவில் தான் இவரது தாத்தாவின் கல்லறையும் உள்ளது இந்த கல்லறைக்கு விஜயின் அப்பா வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் விஜயின் அப்பா தனது படிப்பை முடித்த நிலையில் சென்னைக்கு சென்று அங்கு இயக்குனராக மாறியதோடு அங்கே செட்டில் ஆகிவிட்டார் என விவரம் அறிந்த மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.