தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். வெளிநாடுகளில் படித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் பெரும் கனவாக இருந்தது.
அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு இருந்த போட்டி காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் ஸ்ருதிஹாசன்.
கமலுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தமிழ் சினிமாவில் எடுத்த உடனே பெரிய ஹீரோ திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ருதிஹாசன்.
தமிழில் வரவேற்பு:
மேலும் அந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக கதாநாயகியின் கதாபாத்திரம்தான் இருந்தது. ஸ்ருதிஹாசனுக்கு அது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் ஸ்ருதிஹாசன்.
அதே சமயம் தெலுங்கு சினிமாவில் அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கினார் ஸ்ருதிஹாசன். தெலுங்கிலும் பிரபல நடிகர்களுடன் எல்லாம் சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழை விடவும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய சிறு வயது அனுபவங்கள் குறித்து ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் கமல்ஹாசன் மூலமாக தனக்கு சிறுவயதில் நடந்த மோசமான அனுபவம் ஒன்றை பேசியிருந்தார்.
அந்த பேட்டியில் ஸ்ருதிஹாசனிடம் உங்கள் அப்பாவிடம் நீங்கள் மோசமாக அடி வாங்கியது அல்லது திட்டு வாங்கியது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடந்திருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் ”அதிகமாக எங்களை அப்பா திட்ட மாட்டார். அடிக்கவும் மாட்டார் ஆனால் என்னை விட என்னுடைய தங்கைதான் அதிகம் குறும்பு செய்பவளாக இருந்தார்.
கோபமான கமல்:
அதனால் அக்ஷராதான் அதிகமாக அப்பாவிடம் திட்டு வாங்கி இருக்கிறார் நான் ஒரே ஒரு முறை மட்டும் அவரிடம் கடுமையாக திட்டு வாங்கி இருக்கிறேன். நான் பள்ளி காலங்களில் கொஞ்சம் ஆவரேஜாகதான் படிப்பேன் எப்போதும் அப்பா முன்பு படிப்பது போல பாவலா காட்டுவேனே தவிர படிக்க மாட்டேன்.
ஆனால் மார்க் சீட் வரும் பொழுது என்னுடைய உண்மையான மதிப்பெண் என்னவென்று தெரிய வந்துவிடும். அதேபோல ஒரு முறை மார்க் சீட் வந்த பொழுது ஒரு பாடத்தில் நான் ஃபெயில் ஆகி இருந்தேன். அதை அப்பாவிடம் சொல்லாமல் எப்படியாவது மறைத்து விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அப்பாவே என்னுடைய மார்க் சீட்டை கேட்டதனால் அவரிடம் கொடுத்தேன். அதனை பார்த்த அப்பா கோபத்தில் அந்த மார்க் சீட்டை எனது மூஞ்சியிலேயே வீசினார். அப்படி என்னிடம் அவர் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் அதன் பிறகு நான் படிப்பில் அதிக கவனம் காட்ட துவங்கினேன் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.