பொதுவாகவே மத நம்பிக்கை என்பது சமூகத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது. எந்த ஒரு பிரபலமும் மத நம்பிக்கை தொடர்பாக மட்டும் சர்ச்சையாக எந்த ஒரு விஷயத்தையும் பேசிவிட மாட்டார்கள்.
ஏனெனில் அந்த அளவிற்கு மக்களின் உணர்வுடன் கலந்த ஒரு விஷயமாக மதமும் கடவுளும் இருந்து வருகிறது. முக்கியமாக கடவுள் தொடர்பான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபலங்கள் தொடர்ந்து பிரபலமாக இருக்க முடியாது.
அப்படியாக தற்சமயம் திருப்பதி கோவிலில் சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் நடிகர் டி.டி.எஃப் வாசன். திருப்பதி பெருமாள் கோவிலானது இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஸ்தலம்:
இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை பூஜை செய்வதில் துவங்கி பல முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் ஒரு இடமாக திருப்பதி இருக்கிறது. அதிகபட்சம் நிறைய விஷயங்கள் திருப்பதி கோவிலில் வைத்து தான் பூஜிக்க படுகின்றன.
திருப்பதி பெருமாளிடம் சென்று பூஜிக்கப்பட்டால் அவரது அருள் கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. முக்கியமாக தெலுங்கு தேசத்தில் நிறைய பிரபலங்களே திருப்பதி பெருமாளின் பக்தர்களாக இருந்து வருகின்றனர்.
அதில் மிக முக்கியமானவர் நடிகர் நாகார்ஜுனா. நடிகர் நாகார்ஜுனா பெருமாளுக்கு பாடல்கள் பாடிய அன்னமாச்சாரியார் என்னும் நபரின் வாழ்க்கை வரலாறை படமாக்கி அதில் நடித்தார். அன்னமாச்சாரியார் திருப்பதி கோவிலுக்கு ஒருமுறை குழந்தையாக இருக்கும் பொழுது சென்ற பொழுது அவருக்கு தானாகவே பெருமாளை பார்த்ததும் பாடுவதற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நாகார்ஜூனா பக்தி:
அதனை தொடர்ந்து அவர் பெருமாளுக்காக நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இதனால் அவரது கதையை திரைப்படமாக்கும்போது நாகார்ஜுனாவிற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது இந்த படப்பிடிப்பு முடியும் வரையிலும் அன்னமாச்சாரியார் போலவே கடுமையான விரதத்தில் தான் நாகார்ஜுனா இருக்க வேண்டும்.
எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் அவர் அடிபணிய கூடாது. மது, மாது, புகை பிடித்தல் போன்ற எந்த ஒரு விஷயத்திற்குள்ளும் அவர் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டது. அதேபோல நாகார்ஜுனாகவும் தினமும் இருவேளை குளித்து ஒருவேளை மட்டுமே உணவருந்தி வந்தார்.
அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடியும் வரை அந்த விரதத்தை கடைப்பிடித்தார் நாகார்ஜுனா என்று கூறுகிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அதனால் தெலுங்கு தேசத்தில் இருக்கும் நாகார்ஜுனா மாதிரியான பல பிரபலங்களுக்கே டி.டி.எப் வாசன் திருப்பதி கோவிலுக்கு சென்று பிராங் செய்த வீடியோ கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அதற்கான தண்டனையை அந்த கடவுளே கொடுப்பார் என்று கூறி வெளிப்படையாக பேசி இருக்கிறார் செய்யாறு பாலு