தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடித்து விடலாம் என்கிற எண்ணத்தில்தான் வந்தார்.
அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது. முக்கியமாக கிராமத்தில் இருக்கும் பண்ணையார் மாதிரியான கதாபாத்திரங்கள் நெப்போலியனுக்கு நன்றாகவே செட்டானது. அதனை தொடர்ந்து அவருக்கு எல்லா திரைப்படங்களிலும் அதே மாதிரியான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
தனது மகனுக்காக செய்த காரியம்:
அதற்கு பிறகு திருமணம் செய்த நெப்போலியன் தனது மகனுக்காக அமெரிக்காவில் சென்று செட்டிலானார். அவரது மகனுக்கு இருந்த தசை பிறழ்வு நோய் காரணமாக அமெரிக்காவிலேயே செட்டிலாக வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார் நெப்போலியன்.
அதனை தொடர்ந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை விட்டு அமெரிக்காவுக்கு சென்று அங்கு தொழில் தொடங்கி வாழ்ந்து வருகிறார் இதற்கு நடுவே இடையிடையே வந்து சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்ய இருப்பது குறித்து பத்திரிக்கையாளன் செய்யாறு பாலு சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் போது நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். எதிர்பார்த்ததை விடவும் மிக பிரம்மாண்டமாக தான் அவரது திருமணம் நடக்க இருக்கிறது என்று கூறுகிறார் செய்யாறு பாலு.
திருமண ஏற்பாடு:
ஆனால் ஒரு பக்கம் திருநெல்வேலியில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன இன்னும் இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை. இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான அம்பானி குடும்பத்தில் ஆனந்த் அம்பானிக்கு திருமண விழா சமீபத்தில் நடந்து வந்தது.
எப்படி ஆனந்த் அம்பானிக்கு அவருடைய தந்தை ஒரு பெரும் பிரமாண்டமான திருமணத்தை நடத்த நினைக்கிறாரோ அதேபோல் தான் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு நடத்த நினைக்கிறார். ஆனால் நெப்போலியன் திருமணம் செய்ய இருப்பதை மட்டும் நிறைய பேர் சர்ச்சைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருக்கிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. அவர் மேலும் கூறும் பொழுது நடிகர் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் நெப்போலியன் இருந்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் எடுத்த உடனே அது சங்க தலைவர் ஆன விஜயகாந்திடம் செல்லாது.
ராதாரவி நெப்போலியன் மாதிரியான நடிகர்களிடம்தான் முதலில் அந்த பிரச்சனை வரும். அவர்களாலேயே தீர்க்க முடியாவிட்டால்தான் அது விஜயகாந்த்திடம் செல்லும். இப்பொழுது இருக்கும் நடிகர் சங்கம் அப்படி இல்லை என்று நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியதாக கூறுகிறார் செய்யாறு பாலு.
இப்போது இருக்கும் நடிகர் சங்கத்தில் நிறைய அரசியல் பேசுகிறார்கள் அப்போது நாங்கள் எல்லாம் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் கூட நடிகர் சங்கம் என்று வரும் பொழுது ஒற்றுமையாகதான் இருந்தோம் என்று கூறியிருக்கிறார் நெப்போலியன். இந்த தகவலை தனது பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்