வளிமண்டல மாசினை சுத்தமாக்கும் துளசி.

மூலிகைகளின் அரசி  துளசி இளமையைக் காக்கும். துளசி பல நோய்களைத் தீர்க்கும். இந்த துளசி நோய் வருமுன் காத்து வந்த நோயை விரட்டி எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. 

நாம் நினைப்பது போல் இந்த துளசி நோய்க்கு மட்டும் நிவாரணி அல்ல. சுற்றுச்சூழலும் இதன் பங்கு மகத்தானது .காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் ஆக்சிஜனை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது .

இந்த பணியை பெரும்பாலான எல்லா தாவரங்களும் செய்தாலும் துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கு வித்தியாசம் உள்ளது. துளசியில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் வளிமண்டலத்தில் உள்ள கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் காற்றினை சுத்தப்படுத்தி மிக நல்லது செய்வது அதுமட்டுமல்ல துளசி செடி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. 

துளசிச் சாறு அருந்துவதன் மூலம் சளி நீங்கும் காய்ச்சலுக்கு கைகண்ட மருந்தாக இந்த துளசியை கூறலாம். துளசி வைரஸ் காய்ச்சல், மூளை காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த கூடிய தன்மை உள்ளது என்று ஜப்பானியர்கள் கூறியுள்ளார்கள். 

அதுமட்டுமல்ல 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளர் சுண்டும் வரை காய்ச்சி குடித்து விட்டு சிறிது எலுமிச்சம் சாறு அருந்தி கம்பளி கொண்டு உடல் முழுக்க மூடிக் கொண்டு படுத்த உறங்கினால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

இது உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உள் வெப்பத்தை அகற்றும் குணம் துளசிக்கு உண்டு. உடலில் ஏற்படும் உள் வெப்பத்தை அகற்றும் குணம் துளசிக்கு உண்டு. துளசி சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். இருமல் ,சளி, ஜலதோஷம் இவற்றிற்கு மிக அருமருந்தாக எந்த துளசி உள்ளது. 

ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடிய சக்தி இந்த துளசிக்குஉண்டு. இன்றைக்கு உள்ள நீரழிவு நோயாளிகளுக்கு ஒபிசிட்டி என்ற உடல் பருமன் காரணமாக சில பேருக்கு பிளட் பிரஷர் அதிகமாக ஏற்படும். தினமும் துளசி இலைகளை மென்று தின்றால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையை குறைக்க எத்தனை தூரம் ஓடினாலும் நடந்தாலும்  குறையாத தொப்பையை எலுமிச்சம் சாறு துளசிச் சாறு சிறிது தேன் விட்டு கலந்து சூடாக்கி குடித்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தொப்பை குறையும். 

துளசி இலையை முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும் .50 மில்லி 2 சிட்டிகை சீரகம் பொடி சேர்த்து காலை மாலை 48 நாள் தொடர்ந்து உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். 

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து தோல் நோய் உள்ள இடங்களில் பற்றுப் போடலாம். இதனால் சொறி ,சிரங்கு குணமாகும். 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …