பேச்சுலர் செய்யக்கூடிய எளிமையான சாம்பார் ரெசிபி.

பேச்சுரலாக இருக்கக்கூடிய ஆண்கள் தோசை அல்லது இட்லி சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அது செய்வது எப்படி என்று யோசிப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இன்று இந்த எளிய சாம்பார் ரெசிபியை கற்றுக்கொண்டால் வீட்டு சாம்பார் சுவையான சாம்பார் மீன்களில் வைத்து அசத்தலாம்.

இதனை செய்ய தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு 100 கிராம் கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி

 தனியா 2 ஸ்பூன் 

புளி

வெங்காயம்

எண்ணெய்

மிளகாய் 8 

தேங்காய் ஒரு மூடி முருங்கைக்காய் கத்திரிக்காய்

 முள்ளங்கி 

ஏதாவது ஒன்று இருக்கலாம் அல்லது ஒவ்வொன்றையும் சிறு துண்டுகளாக சேர்த்தும் போடலாம்.

செய்முறை 

துவரம்பருப்பை நன்கு வேகவிட்டு இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு புளி உப்பு சேர்த்து ஊற போட்டு கொள்ளவும் கொத்தமல்லி கடலைப்பருப்பு மிளகாய் பெருங்காயம் முதலியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும் இவற்றுடன் கலந்து விழுதாக அரைத்துக்கொள்ளவும் புளி கரைசலை ஒரு சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்கு வெந்ததும் அதில் சின்ன வெங்காயத்தை உரித்து பச்சை மிளகாயை கீரி போடவும்.

கடைசியாக நன்றாக கொதித்து வெந்து இருக்கக்கூடிய பருப்பையும், அரைத்த மசாலாவையும் போட்டு கிளறுங்கள்.

அதன் பிறகு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.வேக வைத்து இருக்கும் காய்கறிகளான முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி இவற்றை வெங்காயம் போடும்போது சேர்த்து வருவது கூடுதல் சுவையை கொடுக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …