ரஜினி விஜய்யால கூட இதெல்லாம் பண்ண முடியாது.. மம்முட்டிக்கிட்ட கத்துக்கணும்!. வியந்துப்போன இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களின் உயரம் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து கணிக்கப்படுகிறது. எந்த நடிகர் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறாரோ அவர்தான் தமிழில் பெரிய நடிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதனாலேயே நடிகர்கள் அவர்களது சம்பளத்தை வெகுவாக அதிகரித்து கொள்கின்றனர். முக்கியமாக அவர்களை விட சின்ன நடிகர்கள் சம்பளத்தை அதிகரிக்கும் பொழுது இவர்களால் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள முடிவதில்லை.

உதாரணத்திற்கு சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகரித்ததன் காரணமாக விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்களும் அவர்களது சம்பளத்தை அதிகரித்தனர் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதேபோல தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் விஜய் ரஜினி மாதிரியான நடிகர்கள்தான் டாப் நடிகர்களாக அறியப்படுகின்றனர்.

சம்பள பிரச்சனை:

இப்படி சம்பளம் என்பது ஒரு நடிகரின் சுயமரியாதையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால் அதே சமயம் படத்தின் தயாரிப்பு செலவில் அதிகபட்சமான பணத்தை சம்பளமே விழுங்கி விடுகிறது என்பது மோசமான விஷயமாக இருக்கிறது.

இதனால் 250 கோடி பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டாலும் அதில் 200 கோடி சம்பளமாகவே போய்விடுகிறது.  மீதம் இருக்கும் 50 கோடியில் திரைப்படம் உருவாகும் காரணத்தினால் அந்த திரைப்படம் தரமான திரைப்படமாக இருப்பதில்லை.

இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒரு மாற்றமான நபராக மம்மூட்டி இருந்திருக்கிறார். நடிகர் மம்மூட்டியுடன் பணியாற்றியது குறித்து சமீபத்தில் ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது மம்முட்டி மிகவும் அமைதியான ஒரு நபர்.

மாஸ் காட்டிய மம்முட்டி:

அவருடன் அரசியல் என்கிற திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன் அரசியல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அவருடைய நாற்காலியை வேறு நபர் போடுவதை மம்மூட்டி அனுமதிக்க மாட்டார். என்னை கெடுத்து விடாதீங்க மலையாள சினிமாவில் இப்படியெல்லாம் கிடையாது என்று என்னிடம் கூறுவார்.

அதேபோல அவருக்கான சாப்பாடையும் அவரே எடுத்து வந்து விடுவார், அரசியல் திரைப்படத்தில் நடிப்பதற்காக மம்முட்டி 25 லட்சம் சம்பளமாக வாங்கினார். அதற்கு பிறகு அவர் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார். அப்பொழுது மம்மூட்டியை சந்தித்த நான் என்னிடம் 25 லட்சம் சம்பளம் வாங்கினீர்கள் அந்த படத்திற்கு மட்டும் இரண்டு லட்சம் தான் வாங்குகிறீர்கள் என கேட்டேன்.

அதற்கு பதில் எழுத மம்முட்டி ”அது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் ஆனால் கதை சிறப்பான கதை, பெரிதாக வெற்றி வெற்றியை கொடுக்காது ஓரளவுதான் அந்த படம் ஓடும். அதனால் அந்த படத்திற்கு அவ்வளவுதான் சம்பளம் வாங்க முடியும் என்று கூறியிருக்கிறார் மம்முட்டி.

தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் ரஜினி மாதிரியான நடிகர்கள் கூட படத்தின் பட்ஜெட்டை பார்த்து அதற்கு ஏற்ற சம்பளம் வாங்காத நிலையில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மம்முட்டி எடுத்துக்காட்டாக இருக்கிறாரே என்று இது குறித்து வியப்படைந்து வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam