சீரியல் சிலுக்கு..! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகை ரச்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார். நிறைய நாடகங்களில் இவர் நடித்த பொழுதும் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு முக்கியமான தொடர் என்று கூறலாம்.

அதில்தான் அவர் அதிகமாக பிரபலமடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரை பொருத்தவரை அது விஜய் டிவியிலேயே சிறப்பான ஒரு தொடர் என்று கூறலாம். பல வருடங்களாக இது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்தது.

ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு முறையும் சரவணன் ஆகவும் மீனாட்சியாகவும் நடிக்கும் நடிகர்களை மட்டும் மாற்றிவிட்டு மீண்டும் அந்த தொடரை நடத்துவார்கள். அந்த வகையில் ரச்சிதா மீனாட்சியாக நடித்த பொழுது சரவணனாக நடிகர் கவின் நடித்தார்.

சீரியலுக்கு வந்த வரவேற்பு:

அந்த சமயத்தில் அந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருந்தது மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகள் மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றது. முதன்முதலாக கன்னட நாடகங்களில்தான் நடித்து வந்தார் நடிகை ரச்சிதா.

ஆனால் தொடர்ந்து அவருக்கு கன்னட சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அப்பொழுது விஜய் டிவியின் பக்கம் வந்தார் ரச்சிதா. ஏனெனில் தமிழில் விஜய் டிவி அதிக வரவேற்பை பெற்ற டிவி சேனலாக இருப்பதை அவர் அறிந்து இருந்தார்.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரில் நடித்தார் ரச்சிதா. அந்த தொடரில் நடித்த பொழுதுதான் அவருக்கு சின்னத்திரை நடிகர் தினேஷுடன் காதல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

சன் டிவியிலும் வாய்ப்பு:

அதற்குப் பிறகு சன் டிவியில் இளவரசி என்னும் தொடரிலும் நடித்தார் ரச்சிதா அதில் முக்கிய கதாபாத்திரம் அவர் இல்லை என்றாலும் கூட ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் அதில் நடித்திருந்தார். தொடர்ந்து ஜீ தமிழ், சூர்யா டிவி என்று பல சேனல்களில் நடித்த பிறகுதான் அவருக்கு சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன் மூன்றிலும் ரச்சிதாவே நடித்தார் தொடர்ந்து பிக் பாஸிலும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பை பெற்றார் ரச்சிதா. பிக் பாஸ் சீசன் ஆறில் முக்கிய போட்டியாளராக ரச்சிதா இருந்து வந்தார்.

இப்பொழுதும் தொடர்ந்து வாய்ப்புகளை அவர் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் புடவையிலேயே கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ரச்சிதா அந்த  புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் சீரியலில் வரும் ரச்சிதாவா இது என்று கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam