தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை மீனா. தொடர்ந்து மீனா குறித்து நிறைய சர்ச்சைகள் தற்சமயம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் மீனா பிரபல நடிகையாக இருந்த காலகட்டத்திலேயே அவரை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் வந்தது கிடையாது.
சிறு வயது முதலே மீனா தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் இளம் வயதில் மீனா கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் நடிகர்களுடன் அவரைக் குறித்து எந்த ஒரு கிசுகிசுக்களும் இருந்தது கிடையாது. அதிகபட்சம் இவர் பிரபுதேவாவை காதலித்ததாக மட்டும் ஒரு தகவல் உண்டு.
மீனா குறித்த சர்ச்சை:
மற்றபடி எந்த நடிகருடனும் மீனாவுக்கு தொடர்பு இருந்ததாக கதைகள் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது தற்சமயம் பாஜகவின் முக்கிய பிரமுகர் ஆன எல் முருகனுடன் மீனாவை தொடர்பு படுத்தி வதந்திகள் கிளம்பி வருகின்றன.
இது குறித்து தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது மீனா முதலில் எதற்காக அந்த பொங்கல் விழாவிற்கு சென்றார். மீனா அந்த விழாவிற்கு வர வைக்கப்பட்டிருக்கிறார் என்றால் சாதாரணமாக வரவழைக்கப்பட்டிருக்க மாட்டார்.
அவருக்கு சொகுசு விமானம் தயார் செய்திருப்பார்கள் சொகுசு ஹோட்டலில்தான் அவர் தங்கி இருப்பார். இவ்வளவும் செய்து பிரதமர் மோடி வரும் விழாவில் எதற்கு மீனா கலந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஆதரவற்றவர்களுக்கு உணவளித்திருக்கலாம்.
முந்தைய வாழ்க்கை:
பல உதவிகளை செய்திருக்கலாமே என்கிறார் தமிழா தமிழா பாண்டியன் மேலும் அவர் கூறும் பொழுது மீனாவின் முந்தைய வாழ்க்கையில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கான விஷயங்கள் நடந்திருக்கின்றன.
மீனாவின் சித்தி வீட்டு வேலைகளை பார்த்து வந்த ஒரு நபராக இருந்தார். ஒரு அரசியல்வாதியிடம் அவர் வீட்டு வேலைகளை பார்த்து வந்தார். அவருடன் இருந்து வந்த மீனா சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார்.
சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே இளம் வயதில் மீனாவிற்கு ஒரு காதல் இருந்தது ஒரு நபரை மிக தீவிரமாக காதலித்து வந்தார் மீனா. அதற்குப் பிறகு மீனாவிற்கு திரைத்துறையில் வரவேற்புகள் அதிகரித்தது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர துவங்கினார் மீனா.
அதற்குப் பிறகு அவருக்கும் அவருடைய காதலருக்கும் இடையேயான காதல் உறவு முறிந்து விட்டது. ஆனால் அந்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள சென்று இருக்கிறார் மீனா, என்று மீனாவின் சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கை பற்றி கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.