தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் சௌகார் ஜானகி மிகவும் முக்கியமானவர். சௌகார் ஜானகி தமிழில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என்ற பல பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
மேலும் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சௌகார் ஜானகி. அதனாலையே சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சௌகார் ஜானகியின் பேத்திதான் நடிகை வைஷ்ணவி. நடிகை வைஷ்ணவி தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஆக இருந்தார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு:
1987 இல் வெளியான தலைவனுக்கு ஒரு தலைவி என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானார் வைஷ்ணவி. சினிமாவில் தொடர்ந்து கடற்கரை தங்கம், நெத்தியடி, என் தங்கை என்று பல படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார் வைஷ்ணவி.
1987ல் தான் இவர் சினிமாவில் அறிமுகமே ஆனார். ஆனால் 1990களில் மட்டும் எட்டு படங்களில் நடித்திருந்தார் வைஷ்ணவி. அந்த அளவிற்கு வெகு சீக்கிரத்தில் அவர் பிரபலமாக இருந்தார். இதற்கு நடுவே 1993இல் லட்சுமி கல்யாண வைபோகமே என்கிற ஒரு நாடகத்தை உலகம் முழுக்க நடத்தி பெரும் சாதனை படைத்தார் வைஷ்ணவி.
100 முறை நடத்தப்பட்ட இந்த நாடகம் அமெரிக்கா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, லண்டன் மற்றும் பாரிஸ் என்று பல உலக நாடுகளில் அரங்கேற்றப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றது. இவ்வளவு சாதனைகளை செய்த வைஷ்ணவி தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில்தான் நடித்தவர் என்பதால் பெரிதாக அவரது சாதனை மக்கள் மத்தியில் தெரியவில்லை.
தொடர்ந்து வாய்ப்பு:
இருந்தாலும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் அவர் நடித்தார் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருப்பார் அதிகபட்சம் நிறைய திரைப்படங்களில் தங்கை கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார் வைஷ்ணவி. 1987 முதல் 1996 வரை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மட்டுமே சினிமாவில் பயணித்து வந்தார் வைஷ்ணவி.
ஆனால் அந்த 10 வருடங்களுக்குள்ளாகவே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்தார். அதற்கு பிறகு எங்கே போனார் வைஷ்ணவி என்பது பலருக்கு கேள்வியாக இருக்கலாம். திருமணத்திற்கு பிறகு வைஷ்ணவி நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அதற்கு பிறகு பின்னணி டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மட்டும் பணிபுரிந்து வந்தார் சமீபத்தில் நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்டரி திரைப்படத்தில் கூட சிம்ரனிற்க்கு வைஷ்ணவி தான் டப்பிங் செய்திருந்தார். தற்சமயம் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வந்திருக்கும் வைஷ்ணவி திரும்பவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.