தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் தடம் பதித்த இவர் இன்று பல படங்களில் நடித்து மாபெரும் வெற்றியை தனதாக்கி கொண்டார்.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி இவர் நடிப்பில் வெளி வந்த ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இவர் இயக்கையும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் இனிமே நடிக்க கூடாது..
இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தனுஷின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ராயன் படத்தை துவங்கி நடிப்பதற்கு முன்பே பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ராயன் படத்தை நடித்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
மேலும் ராயன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அட்வான்ஸ் பெற்ற திரைப்படங்களில் நடிக்காமல் கால தாமதத்தை ஏற்படுத்தி உள்ளதாக விஷயங்கள் கசிந்து உள்ளது. இதை அடுத்துத்தான் எந்த உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எந்த ஒரு புதிய படத்தையும் ஆரம்பிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கக்கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு தீர்மானத்தை இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது.
நடிகர் கார்த்தி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
இதனை அடுத்து நடிகர் கார்த்தி இது குறித்து விளக்கம் அளிக்கும் போது இது வரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நடிகர் தனுஷ் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளும் எழுந்ததில்லை.
அது போல எந்த ஒரு புகாரும் நிலுவையில் இல்லை என்பதையும் உறுதி பட தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனுஷ் மீது எடுத்து இருக்கக்கூடிய சங்கத் தீர்மானம் கடுமையான அதிர்ச்சியை தனக்கு ஏற்படுத்தி உள்ளதாக சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் இந்த விஷயத்தை குறித்து நடிகர் சங்கத்தில் கலந்து ஆலோசிக்காமல் சோலோவாக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதனை அடுத்து நடிகர் சங்கம் சார்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக நடிகர் கார்த்தி சொல்லியிருக்கிறார்.
மேலும் நடிகர் சங்கம் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் இது போன்ற முடிவை எடுத்து தனுஷ் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வருத்தம் அளிப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்திருப்பது வருத்ததிற்குரிய விஷயமாக நடிகர் கார்த்தி கூறியிருப்பதோடு இது வரை எழுத்துப்பூர்வமான ஆவணம் தனக்கு வந்து சேரவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி வெளியிட்டு வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ தனுஷுக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.