அட்ரா சக்க..! ஒட்டுமொத்த மருத்துவ துறையையும் புரட்டி போட்ட புதிய கண்டுபிடிப்பு..! வேற லெவல்..!

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்தவரிசையில் தற்போது செயற்கை இதயத்தை பொருத்தக் கூடிய வகையில் மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த மருத்துவத்துறையை புரட்டிப் போட..

உலகிலேயே முதல் முதலாக டைட்டானியத்தால் ஆன செயற்கை இதயம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வேகமாக வெளி வந்துள்ளது.

இந்த செயற்கை இதயமானது அமெரிக்காவை சேர்ந்த BIVACOR எனும் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதனின் ரியல் இதயம் செயல் இழக்கும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு வேறொரு இதயம் கிடைக்கும் வரை இதை மாற்றாக நாம் பயன்படுத்த முடியும்.

அத்தோடு இந்த இதயமானது டெக்டாஸ் மருத்துவ மையத்தில் ஒருவருக்கு பொருத்தப்பட்ட நிலையில் டெக்டாஸ் ஹார்ட் இன்ஸ்டியூட் மற்றும் பை வாக்கர் நிறுவனம் தனது கண்டுபிடிப்பை பற்றி கூறியுள்ளது.

மருத்துவத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாக இந்த கண்டுபிடிப்பு விளங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

புதிய கண்டுபிடிப்பு..

மேலும் இந்த செயற்கை இதயமானது கடினமான உலோகங்களில் ஒன்றாக கருதப்படும் டைட்டானியத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டைட்டானியம் ஆனது 1960-இல் சேதம் அடைந்த பற்களுக்கு மாற்றாக செயற்கை பல்லை உண்டாக்கிய உலோகமாக பரவலாக பயன்படுத்தப்பட்டது.

அந்த வகையில் இதே உலேகத்தில் செயற்கை இதயத்தை மனிதனுக்கு பொருத்தக்கூடிய பணியில் இந்த உலேகத்தால் ஆன செயற்கை இதயத்தை பொருத்தி டெக்ஸ்டாஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையானது ஜூலை 9-தேதி அன்று செய்யப்பட்டதாகவும் இந்த புதிய தொழில்நுட்பமானது கார்ட்டியோ ஜெனிக் அதிர்ச்சி மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 57 வயதான நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்ட நிலையில் அவர் சிறப்பாக தற்போது இருக்கிறார்.

மேலும் இந்த செயற்கை இதய கருவியானது ஒரு குழந்தையின் மார்புக்குள் பொருந்தக்கூடிய அளவு க்கான கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என சொல்லலாம்

வேற லெவல் சாதனை..

இந்த செயற்கை இதயத்தின் மூலம் ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் ரத்தத்தை பாம் செய்ய உதவி செய்வதால் உடற்பயிற்சி செய்யக்கூடிய வயது வந்தவர்களுக்கு கூட இது போதுமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்று உலகெங்கிலும் 26 ஆயிரம் மில்லியன் மக்கள் இதய செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவில் 4000 பேர் எதையும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்யக் கூடிய வகையில் இந்த புதிய செயற்கை இதயங்கள் பயன்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும் வியப்பின் உச்சத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் மனித உயிர்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam