என்னை இந்த வேடத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க.. நடிகை திரிஷா நம்பிக்கையை பாத்திங்களா..?

பதின் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் சாமி. சாமி திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதிக பிரபலம் அடைந்தார்.

அதற்கு பிறகு அவர் நடிப்பில் லேசா லேசா மற்றும் இன்னும் பல பல படங்கள் வெளியாகின. அடுத்த சில வருடங்களிலேயே கில்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் அதிகபட்சம் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார் திரிஷா.

திரிஷா வளர்ச்சி:

திரிஷாவும் நயன்தாரா தமிழ் சினிமாவில் இருந்து வந்த அதே காலகட்டத்தில்தான் வளர்ந்து வந்தார். கிட்டத்தட்ட இரண்டு பேருக்குமே அதிகமாக அப்பொழுது வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு சமயத்தில் திரிஷாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின.

ஆனால் நயன்தாராவிற்கு மட்டும் வாய்ப்புகள் முன்பு வந்ததை விடவும் அதிகமாக வர தொடங்கின. இருந்தாலும் திரிஷா விடாமல் திரைப்படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில்  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் சகோதரி கதாபத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு திருஷாவிற்கு கிடைத்தது.

அந்த கதாபாத்திரம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதில் எவ்வளவு அழகாக திரிஷாவை காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருந்தார் மணிரத்தினம். அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் திரிஷா. தொடர்ந்து தற்சமயம் படங்களில் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

சினிமாவில் ரீ எண்ட்ரி:

ஏற்கனவே லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மேலும் கமலஹாசன் நடிக்கும் தக்லைஃப் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இதற்கு நடுவே நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் திரிஷா. இந்த நிலையில் சமீபத்தில் பிருந்தா என்கிற தொடரில் நடித்திருக்கிறார் திரிஷா. அந்தத் தொடர் நேற்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் திரிஷா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேட்டியில் கூறும்பொழுது முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்தது மிகவும் ஈர்ப்பாக இருந்தது. எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதும் சவாலான விஷயம் தான். ஆனால் இயக்குனர் தெளிவாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து விட முடியும்.

படத்தில் எனது உடல் மொழியில் இருந்து பல விஷயங்கள் குறித்து விவாதித்து ஒத்திகை பார்த்த பிறகு நான் அதில் நடித்தேன். இதற்கு முன்பு பல ஓடிடி சீரிஸ்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த பொழுதும் அவற்றில் எனக்கு கதாபாத்திரம் அவ்வளவாக பிடிக்காததால் நடிக்கவில்லை. ஆனால் இந்த சீரிஸில் என்னுடைய முழு மெனக்கடலையும் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் திரிஷா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam